வாட்ஸ்அப் மூலம் புதுப்பிப்புப் பணி குறித்து பேசிய தரப்பினரிடையே நீதிமன்றத்தில் மோதல்

வாட்ஸ்அப் மூலம் புதுப்பிப்புப் பணி குறித்து பேசிய தரப்பினரிடையே நீதிமன்றத்தில் மோதல்

2 mins read
143505db-988b-4551-adaa-2c3d3950ae8a
புதுப்பிப்புப் பணிகளுக்காக வாட்ஸ்அப் செயலி மூலம் பேசிக்கொண்ட இரண்டு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுப்பிப்புப் பணிகளுக்காக வாட்ஸ்அப் செயலி மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை இரண்டு தரப்பினரை நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது.

தனியார் பொழுதுபோக்கு மன்ற உரிமையாளரும் புதுப்பிப்புப் பணிகளைச் செய்யும் வடிவமைப்பாளரும் ஒருவர்மீது ஒருவர் பழி சுமத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

பொழுதுபோக்கு மன்ற உரிமையாளர் மிகப் பெரிய புதுப்பிப்புப் பணிகளுக்காக வடிவமைப்பாளரை அணுகியுள்ளார். இருவரும் முக்கிய விவகாரங்களைக் கலந்துரையாடிய பிறகு வாட்ஸ்அப் செயலியில் ஒரு குழுவைத் தொடங்கி அதில் தொடர்ந்து தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர்.

புதுப்பிப்புப் பணிகள் தொடர்பில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், பொழுதுபோக்கு மன்ற உரிமையாளர் $1 மில்லியன் இழப்பீடு கேட்டு வடிவமைப்பாளர்மீது வழக்குத் தொடுத்தார்.

அதற்குப் பதிலுக்குத் தமக்கு வரவேண்டிய $500,000 கட்டணம் வரவில்லை என்று கூறி வடிவமைப்பாளர் உரிமையாளர்மீது வழக்குத் தொடுத்தார்.

புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்வதற்குமுன் இரு தரப்பினரும் எழுத்துபூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

எந்தெந்தப் பணிகள் செய்யவேண்டும் என்பது அதிகாரபூர்வமற்ற முறையில் வாட்ஸ்அப் மூலம் கலந்துரையாடப்பட்டது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி முகமது ஃபைசால் தெரிவித்தார்.

எழுத்துபூர்வ ஒப்பந்தத்தில் புதுப்பிப்புப் பணிகளுக்குத் தேவையான விளக்குகள் போன்ற பொருள்கள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் அதுகுறித்து எந்த ஆவணமும் வழக்குத் தொடுத்த இரு தரப்பினரிடமும் இல்லை.

புதுப்பிப்புப் பணிகளுக்கான கட்டணம் தொடர்பாக முதன்முறையாக காப்புறுதித் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டபோது தெரிவிக்கப்பட்டது.

புதுப்பிப்புக்கான தொகை $300,000. ஆனால் வடிவமைப்பாளர் $500,000ஆக அதைக் குறிப்பிடும்படி கூறினார். உரிமையாளர் தொடக்கத்தில் $100,000 தொகையைச் செலுத்திவிட்டார்.

ஆனால் இறுதி தொகை $600,000 என்று வடிவமைப்பாளர் சொன்னதை அடுத்து கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

மேலும் புதுப்பிப்புப் பணிகளும் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்று உரிமையாளர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்