சுவா சூ காங்கில் உள்ள ஷா திரையரங்கில் தவறான படம் திரையிடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு Cold War 1994 என்னும் படத்தைக் காண கிட்டத்தட்ட 10 ரசிகர்கள் ஷா திரையரங்கிற்குச் சென்றனர்.
அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேறு ஒரு படம் திரையிடப்பட்டது.
இதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு ஷா திரையரங்கு படத்திற்கான கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்தது. மேலும் வாடிக்கையாளர்கள் வாங்கிய ஒவ்வொரு நுழைவுச் சீட்டுக்கும் இலவசமாக மற்றொரு நுழைவுச் சீட்டையும் அது கொடுத்தது.
“திரையரங்கில் முதல் பத்து நிமிடம் விளம்பரம் ஓடியது. பின்னர் The Super Mario Galaxy என்னும் படம் திரையிடப்பட்டது. இதனால் திரையரங்கில் இருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர்,” என்று திரையரங்கிற்கு வந்த வாடிக்கையாளர் சென் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
“10.45 மணிவாக்கில் Cold War 1994 படம் திரையிடப்படாது என்று திரையரங்கு ஊழியர்கள் தெரிவித்தனர். இழப்பீடும் இலவச நுழைவுச் சீட்டும் 11.15 மணிவாக்கில் வழங்கப்பட்டது,” என்றார் அவர்.

