பாதுகாக்கப்படும் நெட்ஸ்டீல் கட்டடம், முன்னாள் பாசிர் பாஞ்சாங் பள்ளி

1 mins read
49d5b20c-bd48-4d5d-883f-d1769ceaa557
நெட்ஸ்டீல் தொழிற்பேட்டை போன்ற மரபுடைமைக் கட்டடங்கள் பாதுகாக்கப்பட பரிந்துரைக்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையமும் சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில் கட்டமைப்பும் 1980களில் திறக்கப்பட்டன. அந்தத் திட்டங்களுக்கு தேசிய இரும்பு, எஃகு ஆலையிலிருந்து எஃகு விநியோகிக்கப்பட்டது.

அது 1961ஆம் ஆண்டு ஜூரோங் தொழிற்பேட்டையில் உருவாக்கப்பட்ட முதல் தொழிற்சாலை.

இன்று நெட்ஸ்டீல் என்று அழைக்கப்படும் அந்த நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக அதே இடத்தில் உள்ளது.

ஸ்டீல் பவிலியன் (Steel Pavilion) என்று அழைக்கப்படும் அந்த இரண்டு மாடிக் கட்டடம் சிங்கப்பூர்ப் பொருளியலுக்கு ஆற்றிய பங்கை நினைவுகூர நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் வரைவு பெருந்திட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதோடு 24 இயு சியாங் சாலையில் உள்ள முன்னாள் பாசிர் பாஞ்சாங் ஆங்கிலப் பள்ளியும் முன்னாள் புக்கிட் தீமா டர்ஃப் சிட்டியில் உள்ள 20 கட்டடங்களும் மரபுடைமைக்காகப் பாதுகாக்கத் திட்டமிடப்படுகிறது. அவை புதிய வீடமைப்புப் பேட்டைகளாக மறுவடிவம் பெறவிருக்கின்றன.

1920களிலும் 30களிலும் மரத்தால் கட்டப்பட்ட ள்ளிகளின் வடிவமைப்புக்கு உதாரணமாக இருந்தது. பாசிர் பாஞ்சாங்கில் அந்தப் பள்ளி 1933ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

முன்னாள் பாசிர் பாஞ்சாங் ஆங்கிலப் பள்ளி.
முன்னாள் பாசிர் பாஞ்சாங் ஆங்கிலப் பள்ளி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

1986ஆம் ஆண்டு மூடிய பள்ளிக்கூட வளாகம் பின் 1999லிருந்து கடந்த ஆண்டு வரை போதைப் புழங்கிகளுக்கான மறுவாழ்வு நிலையமாகப் பயன்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு இயற்கைப் பாதையிலும் பாதசாரிகளுக்கும் சைக்கிளோட்டிகளுக்குமான உள்கட்டமைப்பை மேம்படுத்த நகர மறுசீரமைப்பு ஆணையம் முற்படுகிறது.

2030ஆம் ஆண்டுக்குள் மேற்கு இயற்கைப் பாதையில் புதிய சைக்கிள் பாதைகள் சேர்க்கப்படும். அது ஊட்ரமுக்கும் ஆர்ச்சர்டுக்கும் இடையே அமைக்கப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்