கட்டுமான நிறுவனத்திற்கு 160,000 வெள்ளி அபராதம்

கட்டுமான நிறுவனத்திற்கு 160,000 வெள்ளி அபராதம்

1 mins read
b09453a5-3152-46fe-a7c9-2d5766cd6e97
சாங்கி ரயில் மனை அருகே உள்ள கட்டுமானத் தளத்தில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையிட மரணம் நிகழ்ந்தது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி ரயில் மனை அருகே உள்ள கட்டுமானத் தளத்தில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வேலையிட மரணம் நிகழ்ந்தது. அதில் ஓர் ஊழியர் மாண்டார்.

இந்நிலையில், வேலையிடத்தில் தகுந்த பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த தவறிய லம் சாங் பில்டிங் காண்ட்ராக்டர்ஸ் (Lum Chang Building Contractors) நிறுவனத்திற்கு 160,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின்கீழ் நிறுவனத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டது.

விபத்தில் மாண்ட 29 வயது ‌‌‌‌ஷாஜகான் முகம்மது பங்ளாதே‌‌ஷை சேர்ந்தவர். அவருக்கு தகுந்த பாதுகாப்புதர லம் சாங் நிறுவனம் தவறிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

‌‌‌ஷாஜகான் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுமான தளத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது தகரக் கட்டடுக்குகளால் தாக்கப்படார். அதில் பலத்த காயமடைந்த ஷாஜகான் பின்னர் மாண்டார்.

குறிப்புச் சொற்கள்
வேலையிடம்விபத்துகட்டுமானம்

தொடர்புடைய செய்திகள்