ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு நிதிக்கு உள்ளூர் கட்டுமான நிறுவனமான டிடிஜே டிசைன் அண்ட் எஞ்சினியரிங்கின் நிறுவனர் திரு டியோ ஹோக் சுவீ, $500,000 நன்கொடை வழங்கியுள்ளார்.
640க்கும் அதிகமான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான கல்வி தொடர்பான செலவுகளை இத்தொகையால் பூர்த்தி செய்ய முடியும்.
திரு டியோ, 2015ஆம் ஆண்டிலிருந்து நன்கொடை வழங்கி வருபவர்.
இதற்கு முன்பு அவர் $140,000க்கும் அதிகமான தொகையை நன்கொடை வழங்கியுள்ளார்.
அந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10,000 சிறுவர்களுக்குக் கைகொடுக்கிறது.
“அண்மை ஆண்டுகளாக எங்கள் வர்த்தகம் நீடித்த நிலைத்தன்மையுடன் இயங்கி வருகிறது. எங்கள் வர்த்தகத் திட்டங்கள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. எனவே, வசதி குறைந்தோருக்கு உதவ விரும்புகிறேன்,” என்று திரு டியோ தெரிவித்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு நிதி, சமூகத் திட்டமாக 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.
இதுவரை அந்த நிதியின் மூலமாக $100 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதன் வாயிலாக 220,000க்கும் அதிகமான சிறுவர்கள், இளையர்கள் பலனடைந்துள்ளனர்.

