லோயாங்கில் புதிய விமான இயந்திரப் பழுதுபார்ப்பு நிலைய கட்டுமானம் தொடக்கம்

1 mins read
8a004abd-5a16-4c45-817f-c7dfaa6e0229
புதிய நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமையன்று (ஜனவரி 16) நடைபெற்றது. இதில் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லோயாங்கில் விமான இயந்திரப் பழுதுபார்ப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர் விமான இயந்திரச் சேவைகள் நிறுவனம் இந்த நிலையத்தை இயக்கும்.

பிரிட்டனைச் சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்சின் பொறியியல் பிரிவும் இணைந்து இந்நிறுவனத்தை நடத்துகின்றன.

சிங்கப்பூர் விமான இயந்திரச் சேவை நிறுவனம் ஓராண்டுக்கு முன்பு அறிவித்த $242 மில்லியன் பெறுமானமுள்ள விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் புதிய விமான இயந்திரப் பழுதுபார்ப்பு நிலையம் கட்டப்படுகிறது.

2028ஆம் ஆண்டுக்குள், ஓராண்டுக்கு 400க்கும் அதிகமான இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் ஆற்றலை இந்நிலையம் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமையன்று (ஜனவரி 16) நடைபெற்றது.

இதில் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் கலந்துகொண்டார்.

விமான இயந்திரங்களைப் பராமரிக்கும், பழுதுபார்க்கும், முழுமையாக மாற்றியமைக்கும் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு கான், இவ்விரிவாக்கத் திட்டம் அவற்றைப் பூர்த்தி செய்ய உதவும் என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்