சொத்து முகவர்கள் சேவையில் பெரும்பாலானோர் திருப்தி: ஆய்வு

2 mins read
சொத்து முகவர்கள் ஆண்டுக்கு குறைந்தது ஒரு பரிவர்த்தனையையாவது நிறைவு செய்திருக்க வேண்டும் எனப் பயனீட்டாளர்கள் விருப்பம்
00fd28fa-9e2c-4acb-b8d1-2a023a1a5973
பல்வேறு அம்சங்களில் சொத்து முகவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆய்வில் பங்கெடுத்த பலர் விருப்பம் தெரிவித்ததாக தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவேலிங் புதன்கிழமை (ஜூன் 18) கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொத்து முகவர்கள் ஆண்டுக்கு ஒரு பரிவர்த்தனையையாவது நிறைவு செய்திருக்க வேண்டும் என்று நான்கில் மூன்று பயனீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான் ஆக அண்மைய விதிமுறைகளை அவர்கள் தெரிந்துவைத்திருப்பர் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சொத்து முகவைத் துறையைப் பற்றி பொதுமக்கள் கொண்டுள்ள அபிப்பிராயத்தைக் கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது.

சொத்து முகவைகளுக்கான மன்றம் நடத்திய ஆய்வில் 1,500க்கும் அதிகமானோர் பங்கெடுத்தனர்.

2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை ஆய்வு நடத்தப்பட்டது.

சொத்து முகவர்கள் வழங்கும் சேவைகள் திருப்திகரமாக இருப்பதாக ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 92 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

இருப்பினும், பல்வேறு அம்சங்களில் சொத்து முகவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆய்வில் பங்கெடுத்த பலர் விருப்பம் தெரிவித்ததாக தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவேலிங் புதன்கிழமை (ஜூன் 18) கூறினார்.

உதாரணத்துக்கு, சொத்துப் பரிவர்த்தனைகள் சட்டத்துக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டு நடக்கின்றனவா என்பதை உறுதி செய்ய சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, சிங்கப்பூர் சொத்து முகவைகள் மாநாட்டில் சொத்து முகவர்களிடம் திருவாட்டி சுன் பேசினார்.

இந்த மாநாடு பாய லேபார் வாழ்நாள் கற்றல் கழகத்தில் நடைபெற்றது.

மாநாட்டுக்குச் சிங்கப்பூர் சொத்து முகவைகள் சங்கம் ஏற்பாடு செய்தது.

வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் தன்மையை சொத்து முகவர்கள் மேம்படுத்திக்கொண்டு நிபுணத்துவ ஆலோசனையை வழங்க வேண்டும் என்று பயனீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் திருவாட்டி சுன் கூறினார்.

2025ஆம் ஆண்டு தொடக்கத்தின் நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 36,058 பதிவு செய்யப்பட்ட சொத்து முகவர்கள் உள்ளனர். 1,046 சொத்து முகவைகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்