சிங்கப்பூரில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10), 24 மணி நேர காற்று மாசு தரக் குறியீடு (பிஎஸ்ஐ) மிதமான அளவிலேயே நீடித்தது. இது, முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் சற்றுக் குறைந்திருந்தது.
சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் 24 மணி நேர பிஎஸ்ஐ அளவு 70 என்ற மிதமான வரம்பில் இருந்தது என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
ஆகஸ்ட் 9 பிற்பகல் 1 மணி அளவில் அது 81ஆகப் பதிவாகியது.
ஏறக்குறைய 51 முதல் 100 வரையிலான பிஎஸ்ஐ அளவு மிதமான வரம்பாகக் கருதப்படுகிறது.
புகைமூட்டத்தின்போது வெளிப்புற நடவடிக்கைகளைத் திட்டமிடுவது குறித்த சுகாதார ஆலோசனையில், காற்றுத் தரக் குறியீடு ‘நல்ல’ அல்லது ‘மிதமான’ வரம்பில் இருக்கும்போது இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று வாரியம் குறிப்பிட்டது. பிஎஸ்ஐ ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றால், பொதுமக்கள் வெளியில் அதிக நேரத்துக்கு ஈடுபடும் உடற்பயிற்சிகள் அல்லது சிரமமான உடல் உழைப்பு நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அது அறிவுறுத்தியது.


