பெரிய நிறுவனங்களுக்குச் சேவை வழங்கும் ஆடவர் ஒருவர், 3 பில்லியன் வெள்ளி கள்ளப் பண விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உதவினார்.
பிடோக்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் வசித்துவந்த வாங் ஜுன்ஜி, 43, சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
வாங் ஒன்பது நிறுவனங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டார். அதில் மூன்று நிறுவனங்கள் 3 பில்லியன் வெள்ளி கள்ளப் பண விவகாரத்திற்குத் தொடர்புடையவை.
3 பில்லியன் வெள்ளி கள்ளப் பண விவகாரத்தில் 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் 2023ஆம் ஆண்டு நடந்தது.
பொய்யான தகவல்களைக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டதை வாங் ஒப்புக்கொண்டார். தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
சீனாவின் ஷாங்காயைப் பூர்வீகமாகக் கொண்ட வாங் சிங்கப்பூர்க் குடிமகன். அவருக்கு ஜூலை 16ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
3 பில்லியன் வெள்ளி கள்ளப் பண விவகாரத்தில் 10 வெளிநாட்டவர்களுக்கும் 13 முதல் 17 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைத் தண்டனைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி இல்லை.

