தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$4,000 கையாடியதாக காவல்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு

2 mins read
95810b2f-2316-42c0-8363-3ecd100a68a0
கணினியை முறைகேடாகப் பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடி, விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் செயலைப் புரிந்தது ஆகியவற்றின் தொடர்பில், சிங்கப்பூரரான சான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.  - படம்: பிக்சாபே

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட $4,000ஐ எடுத்துக்கொண்டது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின்பேரில், காவல்துறை அதிகாரி ஒருவர் செப்டம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவரது சக ஊழியரிடம் அளித்த வாக்குமூலத்தில் மாது ஒருவரிடம் அவர் பொய்ச் சொல்லச் சொல்லியதாகவும் கூறப்படுகிறது.

மற்றொருவரைப் பற்றிய விவரங்களையும், அந்த நபருக்குத் தொடர்பான காவல்துறைப் புகார் எண்ணையும் பெறுவதற்கு, தமது வேலையிடக் கணினியை அனுமதியின்றி பயன்படுத்தியதாக 43 வயது சான் ஸியாவ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்தப் புகார் எண்ணை அவர் சட்டவிரோதமாக டிரான் தி டியென் எனும் 36 வயது வியட்னாமியப் பெண்ணிடம் கொடுத்தாகக் கூறப்படுகிறது.

கணினியை முறைகேடாகப் பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடி, விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் செயலைப் புரிந்தது ஆகியவற்றின் தொடர்பில், சிங்கப்பூரரான சான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அதோடு, அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்கீழ் அவர்மீது ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. சான் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான டியென் மீது அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதற்கிடையே, சென்ற ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி, $4,000 கையாடியதாக சான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாது ஒருவர் அந்தப் பணத்தை வங்கிப் பரிமாற்றம் மூலம் அவருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பரிவர்த்தனைக்கான காரணங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.

இருப்பினும், ஒரு வாரத்திற்குப் பிறகு, அந்த $4,000 பணம் இன்னும் அவரது வங்கிக் கணக்கில் இருப்பதாகத் தமது சக ஊழியரிடம் பொய்ச் சொல்லுமாறு சான் அந்த மாதைக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சான், டியென் இருவரும் தொடர்பான வழக்குகள் அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்