தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'தாயைக் கொன்ற கைதியின் மரணத்தில் சூது இல்லை'

1 mins read
e7c8cbe0-9614-4e81-a83b-bca9256f286d
தாயார் மல்லிகா ஜேசு தாசனுடன் சுஜெய். கோப்புப் படம்: வான்பாவ் -

2012ஆம் ஆண்டில் தனது தாயைக் கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்துக்கொன்று, உடலை எரிக்க முயற்சி செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுஜெய் சாலமன் சுதர்சனின் மரணத்தில் சூது இல்லை என்று மரண விசாரணை அறிக்கை தெரிவித்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த சுஜெய் சாலமன் சுதர்சனுக்கு ரத்தத்தில் நச்சுத்தன்மை காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்தன என்று மரண விசாரணை அதிகாரி ஆடம் நக்கோடா 2023 மார்ச் 30ஆம் தேதி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

சுஜெய்க்கு ஏற்கெனவே மனக்கோளாறு இருந்தது, ஊட்டச்சத்து பி-12 குறைபாடு, உணர்வுப் பாதிப்பு, உடல் ஒருங்கிணைந்து செயல்படாதது போன்றவற்றாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.