தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்க்கைச் செலவினம்; சிங்கப்பூரர்களுக்கு மேலும் உதவி

2 mins read
பயனீட்டுக் கட்டணத்தில் மேலும் சலுகை, 2025 ஜனவரியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மற்றொரு $300 சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டு, ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் $600 வரையிலான ரொக்கம் போன்றவை அரசாங்கத்தின் கூடுதல் உதவிகளில் உள்ளடங்கும்.
6f767997-179e-4514-96e0-daea7b1b463d
அரசாங்கம் மட்டுமல்லாமல் சமூக, அடித்தள அமைப்புகள், பேரங்காடிகளும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க பங்காற்றுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தற்போதைய வாழ்க்கைச் செலவினம் பெருங்கவலையாக உள்ளது என்றும் இதன் தொடர்பில் சிங்கப்பூரர்களுக்கு உதவ அரசாங்கம் ஆன அனைத்தையும் செய்யும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் பணவீக்கம் மிதமாக இருந்தாலும் வாழ்க்கைச் செலவினப் பிரச்சினை கவலைக்குரியதாக இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

“என்னுடைய குழுவும் நானும் இந்தச் சிரமமான காலகட்டத்தைக் கடந்து செல்ல ஆன அனைத்து உதவிகளையும் செய்வோம்,” என்று அக்டோபர் 2ஆம் தேதி யூடியூப்பில் வெளியிட்ட காணொளிப் பதிவில் பிரதமர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரர்களின் வாழ்க்கைச் செலவினக் கவலையைப் போக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது.

இவ்வாண்டும் பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை உயர்வு இருக்காது என்று அர்த்தமாகாது என்றார் அவர்.

ஆனால், நீண்ட காலத்திற்கு சிங்கப்பூரர்கள் நல்ல வேலையையும் சிறந்த சம்பளத்தையும் தொடர்ந்து அனுபவிப்பதை உறுதிசெய்ய வாழ்க்கைச் செலவுகளை நிர்வகிப்பதே சிறந்த வழி என்று அவர் கூறினார்.

2024ஆம் ஆண்டின் எதிர்[Ϟ]காலத்தை பற்றி பேசிய பிரதமர் வோங், “எதிர்பார்க்கப்படும் அதிக பொருளியல் வளர்ச்சியும் குறைவான பணவீக்கமும் சாதகமாக இருக்கும்,” என்றார்.

இதனால் அதிகமான ஊழியர்கள் தங்கள் ஊதிய அதிகரிப்பை அனுபவிக்க முடியும்.

கொவிட்-19 முந்தைய நிலையில் இருந்த அளவுக்கு பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் [Ϟ]நாடு தழுவிய பொருளியலுக்கு புத்தாக்கம், உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும்.

இது குறித்த அரசாங்கத்தின் திட்டங்களை 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் வெளியிடுவேன் என்றார் திரு வோங்.

வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முந்தைய கொள்கைகளை அவர் பட்டியலிட்டார்.

“வாழ்க்கைச் செலவினத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக உத்தரவாதத் தொகுப்புக்கு அரசாங்கம் $10 பில்லியனுக்கு மேல் ஒதுக்கியது.

“இந்தத் தொகுப்பு மூன்று முறை அதிகரிக்கப்பட்டது.

“இவ்வாண்டில் இதுவரை, ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பமும் $800 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டைப் பெற்றுள்ளது. வீவக வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் $400 வரை பயனீட்டுக் கட்டணச் சலுகையைப் பெற்றுள்ளன. மேலும், தகுதி பெற்ற சிங்கப்[Ϟ]பூரர்களுக்கு $700 வரை வழங்குதொகை வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் சொன்னார்.

வரப்போகும் மாதங்களில் அதிக உதவி வரவிருப்பதாகவும் பிரதமர் வோங் தெரிவித்தார்.

பயனீட்டுக் கட்டணத்தில் அதிக சலுகை, 2025 ஜனவரி[Ϟ]யில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மற்றொரு $300 சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டு, ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் $600 வரை வழங்குதொகை போன்றவை அரசாங்கத்தின் உதவிகளில் உள்ளடங்கும்.

வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க அரசாங்கம் மட்டுமல்லாமல் அமைப்பு மற்றும் நிறுவனங்கள் தங்களுடைய பங்கை ஆற்றுகின்றன.

உதாரணமாக, டிபிஎஸ் வங்கி, உணவங்காடி உணவுக்கு கட்டணக் கழிவுகளை வழங்குகிறது. பேரங்காடிகள் மூத்த குடிமக்களுக்குச் சிறப்புக் கழிவை வழங்குகின்றன.

சமூக, அடித்தள அமைப்பு[Ϟ]களும் நன்கொடையாளர்கள், பங்காளிகளின் ஆதரவுடன் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவி வருகிறது.

அவற்றில் சில மளிகைப் பொருள்களை விநியோகம் செய்கின்றன. மற்றவை பகுதி[Ϟ]நேர சமூகக் கடைகளை நடத்துகின்றன என்று திரு வோங் மேலும் தெரிவித்தார்.

சிரமமான காலத்தை மக்கள் கடந்து செல்ல அரசாங்கம் மேலும் உதவிகளை வழங்கும் என்று யூடியூப் காணொளிப் பதிவில் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
சிரமமான காலத்தை மக்கள் கடந்து செல்ல அரசாங்கம் மேலும் உதவிகளை வழங்கும் என்று யூடியூப் காணொளிப் பதிவில் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: லாரன்ஸ்வோங்/ யூடியூப்
குறிப்புச் சொற்கள்