ஸ்காட்ஸ் ரோட்டில் $180,000 மதிப்பிலான போலி ஆடம்பரப் பொருள்கள் பறிமுதல்

ஸ்காட்ஸ் ரோட்டில் $180,000 மதிப்பிலான போலி ஆடம்பரப் பொருள்கள் பறிமுதல்

காவல்துறைச் சோதனையை அடுத்து இருவர் கைது
படம்: சிங்கப்பூர்க் காவல்துறை/ஏஷியாஒன் இணையத்தளம்

19 Sep 2026 - 12:36 pm

1 mins read

சிங்கப்பூரின் ஸ்காட்ஸ் ரோட்டில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டில் புதன்கிழமை (செப்டம்பர் 16), காவல்துறை திடீர்ச் சோதனை நடத்தியது.

ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் போலியான ஆடம்பரப் பொருள்களை விற்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண்கள் இருவரை அது கைதுசெய்துள்ளது.

அந்தப் பெண்களின் வயது 39 மற்றும் 54 என்று காவல்துறை வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அந்தக் கடைகளிலிருந்து ஆடம்பரப் பைகள், கடிகாரங்கள், ஆடைகள், காலணிகள், அணிகலன்கள் உட்பட 900க்கும் மேற்பட்ட போலிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பொருள்களின் சந்தை மதிப்பு $180,000க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வணிக நோக்கத்திற்காக போலிப் பொருள்களை வைத்திருப்பது நிரூபிக்கப்பட்டால், $100,000 வரையிலான அபராதம், ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அறிவுசார் சொத்துரிமை மீறல்களைக் காவல்துறை கடுமையாகக் கருதுகிறது. சட்டபூர்வ வணிகங்களுக்கும் பயனாளர்க்கும் பாதிப்பு ஏற்படுத்தி லாபம் ஈட்டுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்றும் அது எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கடைத்தொகுதிசில்லறை விற்பனைபறிமுதல்போலிகைதுபெண்கள்காவல்துறைசோதனை