சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தில் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் சிங்கப்பூரர்கள். அவர்களின் வயது 54 மற்றும் 45.
கைது நடவடிக்கை புதன் கிழமை நடந்ததாகவும்
சம்பவத்தின் போது அவர்களிடம் 1.6 கிலோகிராம் போதைமிகு அபின், 17 போதை மாத்திரைகள் இருந்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
அவற்றின் சந்தைமதிப்பு கிட்டத்தட்ட 183,400 வெள்ளி என்று அதிகாரிகள் கூறினர்.
சந்தேக நபர்கள் கிளமெண்டி வெஸ்ட் ஸ்டிரீட் 1 ல் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை தொடர்கிறது.
சிங்கப்பூரில் 500 கிராமுக்கு மேல் கஞ்சா அல்லது 15 கிராம் போதைமிகு அபின் கடத்தப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.

