ஆடவர் ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து தம்பதியர் $220,000 ஏமாற்றினர். அந்த ஆடவர் தமது மனைவியின் கள்ளக் காதலர் என்று அவரது கணவருக்குத் தெரியாது.
இந்நிலையில், சொத்து மூதலீட்டுத் திட்டம் என்று கூறி திரு டேவிட் டானை கணவனும் மனைவியும் ஏமாற்றினர்.
ஆனால் அப்படி ஒரு திட்டமே இல்லை என்று திரு டானுக்குத் தெரியாது.
தள்ளுபடி விலையில் சொத்துகள் விற்கப்படுவதாக ஃபெலிஷியா டே பீ லிங்கும் எரிக் ஓங் சீ வெய்யும் திரு டானிடம் பொய் கூறினர்.
அதற்கு முன்பு ஓங்கைத் திரு டான் சந்தித்ததே இல்லை. ஆனால் அவர் டேயின் கணவர் என்பது அவருக்குத் தெரியும்.
மோசடி குற்றம் புரிந்ததை 49 வயது டே, 50 வயது ஓங் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) ஒப்புக்கொண்டனர்.
48 வயது திரு டானிடம் ஓங் $10,000 திருப்பிக் கொடுத்துவிட்டார்.

