வெளிநாட்டுச் சுங்க வரியைத் தவிர்க்கப் போலி புகார் அளித்த தம்பதி

வெளிநாட்டுச் சுங்க வரியைத் தவிர்க்கப் போலி புகார் அளித்த தம்பதி

2 mins read
bed7f97e-d773-4122-840a-81a38f9e4af1
சிங்கப்பூரில் வாங்கிய தங்க நகைகளுக்கான சுங்க வரியைத் தவிர்க்க அதிகாரிகளிடம் போலி புகார் அளித்த வெளிநாட்டுத் தம்பதிமீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் வாங்கிய தங்க நகைகளுக்கான சுங்க வரியைத் தவிர்க்க அதிகாரிகளிடம் போலிப் புகார் அளித்த வெளிநாட்டுத் தம்பதிமீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

30 ஹிவா சஹபண்டுக வருன க‌னி‌ஷ்காவும் அவரது 29 வயது மனைவி ஜெயசேகர கம்லத் ரலாலாகே யெஹிலிசதுரிகாவும் ஒரே நோக்கத்துடன் செயல்பட்டு நீதிக்குத் தடையாக இருந்த குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.

ஜப்பான் நட்டைச் சேர்ந்த ஹிவா, அதிகாரிகளிடம் போலிப் புகார் அளித்த குற்றச்சாட்டையும் எதிர்கொள்கிறார்.

சிங்கப்பூரில் வாங்கிய $20,000 மதிப்புள்ள தங்க நகைகளும் ஹிவாவும் இலங்கையைச் சேர்ந்த அவரது மனைவி ஜெயசேகராவும் இலங்கைக்குக் கொண்டுசெல்ல முயன்றனர்.

அந்தத் தங்க நகைகளுக்கான சுங்க வரியைக் கட்டாமல் இருக்க இம்மாதம் 4ஆம் தேதி, புகிஸ் வட்டாரத்தில் உள்ள குயின் ஸ்தீரிட்டில் முன்பின் தெரியாத ஆடவர் ஒருவர் தமது உடைமைகளைப் பறித்துச் சென்றதாக ஹிவா காவல்துறையிடம் புகார் அளித்தார்.

தம்மிடமிருந்த தங்க நகை, தொலைபேசி, $400 ரொக்கம் ஆகியவை பறிபோனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 5ஆம் தேதி, அதிகாரிகள் அந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அப்போது ஹிவா கூறியது முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

பின்னர், வெளிநாட்டுச் சுங்கக் கட்டணத்தைத் தவிர்க்கவே அத்தகைய புகாரை அளித்ததாக ஹிவா ஒப்புக்கொண்டார்.

ஹிவாவின் மனைவி ஜெயசேகர தமது பயணப் பையில் தங்க நகைகளை ஒரு புட்டியில் வைத்திருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணைக்குமுன் நடைபெறும் கலந்துரையாடல் இம்மாதம் 19ஆம் தேதி இடம்பெறும்.

நீதிக்குத் தடையாக இருப்போருக்கு அதிகபட்சம் ஏழாண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
போலிபுகார்வெளிநாட்டவர்