மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பெலின்டா ஆங் பதவி ஓய்வு

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பெலின்டா ஆங் பதவி ஓய்வு

2 mins read
ஆங்கின் திறனும், நிபுணத்துவமும் சிங்கப்பூர் நீதித்துறைக்கு அளவிடமுடியாத வலுசேர்த்துள்ளது: தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன்
9109fa29-2324-40df-b8c1-461b0504a58e
நீதிபதி பெலின்டா ஆங், கடந்த 2022ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பதவி நியமனம் செய்யப்பட்டார். - படம்: சிங்கப்பூர் நீதிமன்றங்கள்

சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பெலின்டா ஆங், இம்மாதம் பதவி ஓய்வு பெறவுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நியமனம் செய்யப்பட்ட திருவாட்டி ஆங் பணியாற்றும் கடைசிநாள் ஏப்ரல் 23ஆம் தேதி ஆகும்.

அன்றைய தினம், மேல்முறையீடுகளுக்கான தமது கடமைகளை ஆற்றியபிறகு அவரது நீதித்துறை சேவை முடிவுக்கு வரவிருக்கிறது. இதன் விவரங்களை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் புதன்கிழமை (ஏப்ரல் 8) வெளியிட்டது.

ஏறத்தாழ 20 ஆண்டுகள் திருவாட்டி ஆங் நீதித்துறையில் சேவையாற்றியுள்ளார். கப்பல்துறை, நிதி, பாதுகாப்பு, வங்கி, சிக்கல் நிறைந்த வர்த்தக முரண்பாடுகள், நடுநிலை தேவைப்பட்ட பிரச்சினைகள் என பல முக்கிய வழக்குகளில் அவர் கவனம் செலுத்திவந்தார்.

நீதிபதி ஆங்கின் பதவி ஓய்வு குறித்து தலைமை நீதிபதி புகழாரம் சூட்டியதோடு அவருக்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

“சிங்கப்பூரின் சட்டத்துறையை குறிப்பிடத்தக்க அளவில் வளப்படுத்தி, ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவரின் நீதித்துறைச் சேவை, அதன் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளதை நீதிபதி பெலின்டா ஆங்கின் ஓய்வு குறிக்கிறது,” என்று தமது அறிக்கையில் திரு சுந்தரேஷ் மேனன் கூறினார்.

வர்த்தகம் சார்ந்த சட்டத்துறையில் குறிப்பாகக் கப்பல் விவகாரங்களிலும் நடுநிலை தேவைப்பட்ட வழக்குகளிலும் அவரது திறனை திரு மேனன் மெச்சினார். நீதிபதி ஆங் பணியாற்றிய காலம் முழுவதும் அவர்மீது சகாக்கள் நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததை அவர் மேற்கோள் காட்டினார்.

சிங்கப்பூர் நீதித்துறையின் மாண்பை நிலைநிறுத்தவும் சட்டத்துறையை மேம்படுத்தவும் நீதிபதி பெலின்டா ஆங் தொடர்ந்து வலுவான பங்காற்றினார் என்பதையும் திரு மேனன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்