ஒலிவியா லாம் மீதான விசாரணை நாளை தொடங்குகிறது

1 mins read
c38f73cc-cbab-42c1-b7f4-4874c1d41dc5
ஹைபிளக்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஒலிவியா லாம் தகவல்களை மறைத்த குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். - கோப்புப் படம்: ஸ்ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஹைஃபிளக்ஸ் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி குறுகிய காலத்தில் பிரபலமடைந்த ஒலிவியா லாம் ஊய் லின் மீதான குற்றவியல் விசாரணை நாளை (ஆகஸ்ட் 11) தொடங்குகிறது.

ஹைஃபிளக்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஒலிவியா லாம், முன்னாள் தலைமை நிதி நிர்வாகி சோ வீ பெங் உட்பட மொத்தம் ஏழு தனிநபர்கள் மீது துவாஸ் ஒருங்கிணைந்த தண்ணீர், மின்சக்தி திட்டம் தொடர்பான தகவல்களை வேண்டுமென்றே வெளியிடத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

எஞ்சிய ஆறு பேர் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஏற்க மறுத்ததால் 56 நாள் குற்றவியல் விசாரணை ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மூட 2021ஆம் ஆண்டில் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.

அதன் பிறகு ஏறக்குறைய ஓராண்டுக் காலத்தில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

நீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் அதில் முதலீடு செய்திருந்த 34,000 பேருக்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை. மூதலீட்டின் மொத்த மதிப்பு $900 மில்லியனாகும்.

நாளை (ஆகஸ்ட் 11) அறுவர் மீதான 11 குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெறும். இதில் லம் எதிர்கொள்ளும் ஆறு குற்றச்சாட்டுகளில் இரண்டு அடங்கும். லாம் மீதான மீதமுள்ள நான்கு குற்றச்சாட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்