ஹஜ் புனிதப் பயணத்துக்காக வரும் ஜூன் மாதத்தில் சவூதி அரேபியா செல்லும் அனைத்து சிங்கப்பூர் ஹஜ் யாத்திரிகர்களும் மெனிங்கோகோக்கல் (meningococcal) தடுப்பூசியுடன் கொவிட்-19, சளித் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்துடன் கலந்தாலோசித்து, சுகாதார அமைச்சும் தொற்று நோய்த் தடுப்பு நிலையமும் அதன் தடுப்பூசித் தேவைகளைப் புதுப்பித்தபிறகு இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கும் வெளிநாடுகளில் இருக்கும்போது தொற்றுநோய்களிலிருந்து அவர்களைத் தற்காத்துக் கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சுகாதார அமைச்சும் தொற்றுநோய்த் தடுப்பு நிறுவனமும் வெள்ளிக்கிழமையன்று (மே 9) இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

