தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓய்வூதியக் குறியீடு: ஆசியாவில் மத்திய சேம நிதி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது

1 mins read
65549fd0-52ac-44a6-bd44-2fd9febfba21
தொடர்ந்து 16ஆவது ஆண்டாக மத்திய சேம நிதி ஆசியாவின் தலைசிறந்த ஓய்வூதிய முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஓய்வூதிய முறை ஆசிய அளவில் தலைசிறந்த இடத்தை மீண்டும் பிடித்து உள்ளது.

தொடர்ந்து 16ஆவது ஆண்டாக மத்திய சேம நிதி (CPF) அந்தச் சிறப்பைப் பெற்று வருகிறது.

மேலும், உலக ஓய்வூதியக் குறியீட்டில் B+ என்னும் இரண்டாவது ஆகப் பெரிய தரநிலையை தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அது பெற்றுள்ளது.

‘2024 மெர்சர் சிஎஃப்ஏ இன்ஸ்டிடியூட் பென்சன் இன்டெக்ஸ்’ என்னும் குறியீட்டின் உலகளாவிய நிலையில், இரு படிகள் முன்னேறி ஐந்தாம் இடத்தை மசேநிதி பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் 48 ஓய்வுக்கால வசதித் திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் மசேநிதி அந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. உலகக் குறியீட்டில் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது.

ஆசிய அளவில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்
மத்திய சேம நிதிகுறியீடுமுதலிடம்