மிக அருகிவரும் குரங்கு வனவிலங்குப் பாலத்தில் முதல் முறையாகக் காணப்பட்டுள்ளது

1 mins read
c489267b-fe7b-4e7b-8f5e-290bf45526f9
அந்தக் குரங்கு சென்ற ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி, மரத்தில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி ஒன்றில் பதிவானது. - படம்: தேசிய பூங்காக் கழகம்

‘ராஃபில்ஸ் பேண்டட் லேங்கர்’ எனும் குரங்கு முதல் முறையாக புக்கிட் தீமா விரைவுச்சாலையில் உள்ள வனவிலங்குப் பாலத்தில் காணப்பட்டுள்ளது.

மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்புப் பகுதியில் பெரும்பாலும் காணப்படும் அது, உணவையும், ஜோடியையும் தேடுவதற்காக மற்ற காட்டுப் பகுதிகளுக்குள் சென்றிருக்கலாம் என்பது ஓர் ஆக்கபூர்வ அறிகுறி என்று கூறப்படுகிறது.

மிக அருகிவரும் அந்தக் குரங்கு வகைக்கு இது ஊக்கமளிக்கக்கூடிய அறிகுறி என்று தேசிய பூங்காக் கழகம் கூறியது.

அந்த இணைப்புப் பாலம் அது பிழைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கவும் அதன் வாழ்விடத்தை விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்பட்டதே அதற்குக் காரணம் என்றது கழகம்.

அந்தக் குரங்கு சென்ற ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி, தரையிலிருந்து பத்து மீட்டர் உயரத்தில் மரம் ஒன்றில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி ஒன்றில் பதிவானது.

குறிப்புச் சொற்கள்