எல்லைகளுக்கு இடையிலான ரயில்வே மசோதா அறிமுகம்

எல்லைகளுக்கு இடையிலான ரயில்வே மசோதா அறிமுகம்

1 mins read
cc936cb9-f4ff-4dcd-8537-4c8ff574f8cb
சிங்கப்பூரில் உள்ள சில பகுதிகளை ஆர்டிஎஸ் ரயில்சேவைக்காகக் ‘குறிப்பிட்டு ஒதுக்கப்பட்ட பகுதிகள்’ (Designated areas) என அடையாளப்படுத்துவதற்கான விதிமுறைகளை மசோதா அறிமுகம் செய்கிறது. - படம்: ஷின்மின்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் ஆர்டிஎஸ் (RTS) விரைவுரயில் இணைப்பில் செயல்படும் சிங்கப்பூர், மலேசிய அதிகாரிகளின் அதிகாரங்களை வரையறுக்கும் மசோதா ஒன்று, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) சமர்ப்பிக்கப்பட்டது.

எல்லை தாண்டிய ரயில்வே (எல்லைக் கட்டுப்பாட்டு இணை அமைவிடம்) மசோதாவைச் சட்ட அமைச்சரும் உள்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான எட்வின் டோங் அறிமுகம் செய்திருந்தார்.

‘எல்லைகளுக்கு இடையிலான ரயில்வே (ஒரே இடத்தில் எல்லைப் பாதுகாப்பு) மசோதா’ என்பது அதன் பெயர்.

சிங்கப்பூரில் உள்ள சில பகுதிகளை ஆர்டிஎஸ் ரயில்சேவைக்காகக் ‘குறிப்பிட்டு ஒதுக்கப்பட்ட பகுதிகள்’ (Designated areas) என அடையாளப்படுத்துவதற்கான விதிமுறைகளை மசோதா அறிமுகம் செய்கிறது.

அத்தகைய பொருள்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பொருள்கள் மனிதப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவையாகவோ, உயிருள்ள உயிரினமாகவோ ஒரு விசாரணையுடன் தொடர்புடைய ஆதாரமாகவோ இல்லாதபட்சத்தில், அவற்றை அந்தப் பயணியே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தச் சிங்கப்பூர் அதிகாரிகள் அனுமதிக்க இடமுண்டு.

குறிப்புச் சொற்கள்