தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீஷான் வட்டாரத்தில் காகங்கள் தொல்லை

1 mins read
029a15bb-ff38-402d-b0ec-211700f93f89
படம்: சின் மின் நாளிதழ் -

பீஷான் வட்டாரக் குடியிருப்பாளர்களை கடந்த சில வாரங்களாக ஏதோ ஒன்று அச்சுறுத்தி வருகிறது. அந்த வட்டாரத்தில் உள்ள காகங்கள் மக்களை ஓடி ஒளிய செய்கின்றன. தங்களைப் பாதுகாக்க பல வழிகளை கையாண்டு வருகின்றனர் குடியிருப்பாளர்கள்.

புளோக் 110 பீஷான் ஸ்திரீட் 12க்கு அருகே இந்தச் சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அடிக்கடி நடக்கின்றன. அந்த இடத்திற்கு சின் மின் நாளிதழ் சென்றிருந்தபேழ, 20 நிமிடங்களில் குறைந்தது பத்து பேரை காகங்கள் தாக்கின.

சாலை விளக்கை யாரெனும் அணுகினால் காகங்கள் கிறீச்சிடும். ஒருவேளை சாலை விளக்கை கடந்து சென்றால், சில காகங்கள் கடந்து செல்பவர்களை கொத்த முற்படும்.

20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வட்டாரத்தில் வசிப்பவர்கள் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதன்முறை என்கின்றனர். காகங்கள் கண்களை கொத்திவிடும் என்று சிலர் அக்கறை தெரிவித்தனர்.

கூடுகளை பாதுகாப்பதற்காக காகங்கள் மனிதர்களை தாக்குவதாக பறவை ஆர்வலர் அமைப்பு ஒன்று கூறியது.மக்கள் தங்களை பாதுகாக்க தொப்பி அணிந்துகொள்ளலாம் அல்லது குடையை விரித்துகொள்ளலாம் என்று அது அறிவுறுத்தியது.