தனியார் பேருந்து மோதிய விபத்தில் சைக்கிளோட்டி மரணமடைந்தார்.
துவாசில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) காலை இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் இறந்தவர், பங்ளாதேஷிலிருந்து வந்த வெளிநாட்டு ஊழியராக இருக்கலாம் என்று சீன நாளேடு ஷின்மின் தகவல் தெரிவிக்கிறது.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விசாரித்தபோது, துவாஸ் சவுத் அவென்யூ 4, துவாஸ் பார்க் கிரசெண்ட் சந்திப்பில் பேருந்து, சைக்கிள் மோதிய விபத்து குறித்து காலை 7.55 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
விபத்தில் சிக்கிய 46 வயது சைக்கிளோட்டி சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு இறந்துவிட்டார்.
காவல்துறை விசாரணையில் 68 வயது ஆண் ஓட்டுநர் உதவி வருகிறார். அந்தப் பேருந்து தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது என ஷின் மின் கூறுகிறது.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

