அட்மிரல்ட்டி டிரைவில் நடந்த விபத்தில் சைக்கிளோட்டி மரணம்

அட்மிரல்ட்டி டிரைவில் நடந்த விபத்தில் சைக்கிளோட்டி மரணம்

1 mins read
39943e9d-53b9-4ed0-87a7-233756ae61db
சைக்கிளோட்டி சம்பவ இடத்தில் மாண்டதை மருத்துவ உதவிக் குழு உறுதிப்படுத்தியது எனச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. - படம்: ‌ஷின் மின்
Google News Preferred Icon

செம்பவாங் ரோடு நோக்கிச் செல்லும் அட்மிரால்டி டிரைவில் ஏற்பட்ட விபத்தில் 39 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

பேருந்தும் சைக்கிளும் மோதிக்கொண்ட இந்த விபத்து சனிக்கிழமை (நவம்பர் 29) காலை வேளையில் நடந்தது.

இவ்விபத்து குறித்து தங்களுக்கு காலை 10.55 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

சைக்கிளோட்டி சம்பவ இடத்தில் மாண்டதை மருத்துவ உதவிக் குழு உறுதிப்படுத்தியது எனச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விசாரணைக்கு 41 வயது பேருந்து ஓட்டுநர் உதவி வருவதாகவும் அது சொன்னது.

பேருந்துச் சேவை எண் 859 தொடர்புடைய இவ்விபத்து குறித்து தாங்கள் அறிந்திருப்பதாக ‘டவர் டிரான்சிட்’ நிறுவனத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

மேலும், “விபத்தில் சைக்கிளோட்டி மாண்டுவிட்டார் என்பதை அறிந்து நாங்கள் ஆழ்ந்த வருத்தமடைந்தோம். இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார் அவர்.

முதற்கட்ட தகவலின்படி, பேருந்து அட்மிரால்டி டிரைவ் வழியாக வந்து கொண்டிருந்தபோது, ​​சைக்கிளோட்டி தனது பாதையிலிருந்து மாறி பேருந்தின் பாதைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

ஓட்டுநரால் பேருந்தை உடனடியாக நிறுத்த முடியாத காரணத்தால் இவ்விபத்து ஏற்பட்டதாகக் கூறிய ‘டவர் டிரான்சிட்’ பேச்சாளர், அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு முழு விவரங்களும் தெரியவரும் என்றார்.

குறிப்புச் சொற்கள்