ஊழியர்களின் எண்ணிக்கையை மும்மடங்கு அதிகரிக்கும் ‘டைக்கின்’

1 mins read
70863d49-e50f-492c-97c1-63cc139e2f85
தெங்கா குடியிருப்பாளர்கள் சிலர் தங்களின் குளிரூட்டு முறையிலிருந்து கசிவுகளை எதிர்நோக்கிய பிறகு, ‘டைக்கின்’ நிறுவனம் பிரச்சினையைச் சரிசெய்ய குழுக்களை அமைத்துள்ளது. - படம்: ஹமிஸான் ஜெய்லானி, நூர் அஃபிஃபா ஹஸாலி

தெங்கா வீடுகளில் உள்ள மையப்படுத்தப்பட்ட குளிரூட்டு முறையைப் பொருத்தும் ‘டைக்கின்’ நிறுவனம், அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை மும்மடங்கு அதிகரித்திருக்கிறது.

முன்னதாக குளிரூட்டு முறையில் கசிவுகள் ஏற்பட்டதாக சில குடியிருப்பாளர்கள் புகார் செய்திருந்தனர்.

கூடுதல் சோதனைகளுக்கும், வேலைப்பாட்டுப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் தனது தரக் கட்டுப்பாட்டுக் குழுவையும் இரட்டிப்பாக்கியுள்ளதாக, ‘டைக்கின்’ பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

குளிரூட்டு முறையைப் பொருத்தும் ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனம் இரட்டிப்பாக்கியுள்ளது என்றும், அவர்களுக்குப் பயிற்சி அளிக்க முயற்சிகளை அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வேலைப்பாட்டுப் பிரச்சினைகளைக் குறைக்க, தரமான வேலை வழிமுறைகளிலும் செய்முறைகளிலும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

அன்றாடம் சராசரியாக தெங்காவில் ஏறக்குறைய 170 ‘டைக்கின்’ ஊழியர்கள் பொருத்தும் பணிகள், பராமரிப்புப் பணிகள், பழுதுபார்ப்புப் பணிகள் ஆகியவற்றை மேற்கொண்டுவருகின்றனர்.

தேவை ஏற்பட்டால், நிறுவனம் அதிகமான ஊழியர்களைப் பணியில் அமர்த்தும் என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்