அமெரிக்காவிலிருந்து வரும் பால் பொருள்கள் உட்கொள்வதற்குப் பாதுகாப்பானவை: எஸ்எஃப்ஏ

அமெரிக்காவிலிருந்து வரும் பால் பொருள்கள் உட்கொள்வதற்குப் பாதுகாப்பானவை: எஸ்எஃப்ஏ

1 mins read
ac01eae7-3def-425e-8515-8d947ba7822e
அமெரிக்காவின் ஒன்பது மாநிலங்களில் உள்ள கால்நடைகளில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டதாக அமெரிக்க விலங்கு, தாவரச் சுகாதாரச் சேவைத் துறை கூறியது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

அமெரிக்காவில் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து பசுக்களில் எச்5என்1 பறவைக்காய்ச்சால் பரவிவந்தாலும், அங்கிருந்துவரும் பால் பொருள்கள் உட்கொள்வதற்குப் பாதுகாப்பானவை.

சிங்கப்பூரில் உணவுப் பாதுகாப்பை மேற்பார்வையிடும் சிங்கப்பூர் உணவு அமைப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அதனைத் தெரிவித்தது.

முழுமையாகச் சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வதன் மூலமோ கையாள்வதன் மூலமோ பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என்று அது கூறியது.

குடியரசுக்குள் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்கள், உணவுப் பாதுகாப்புத் தகுதிவிதிகளையும் இறக்குமதி நிபந்தனைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும் என்று அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இறக்குமதி செய்யப்பட்ட எல்லா பால் பொருள்களுக்கும், கிருமிகளைக் கொல்லக்கூடிய வெப்பப் பதனிடல் முறை மேற்கொள்ளப்படவேண்டும் என்றார் அவர்.

கடந்த மார்ச் மாதம், நியூ மெக்சிகோ, டெக்சஸ், கேன்சஸ், மிச்சிகன் ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடைகளில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டதை அமெரிக்க விலங்கு, தாவரச் சுகாதாரச் சேவைத் துறை உறுதிப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்