ராடின் மாஸ் தொகுதியில் போட்டியிட விரும்பும் சுயேச்சை வேட்பாளர்

1 mins read
215e1139-ae82-4edb-a237-d8d187847f66
டேரல் லோ. - படம்: டேரல் லோ இன்ஸ்டகிராம்

வரும் பொதுத் தேர்தலில் ராடின் மாஸ் தனித்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட விரும்புகிறார் ஒருவர்.

திரு டேரல் லோ, சிங்கப்பூரை வடிவமைப்பதில் அரசாங்கத்தின் பங்கை மதிப்பதாகவும் ஆனால், நாடாளுமன்றத்தில் மிகவும் மாறுபட்ட குரல்கள், சிறந்த விவாதங்களுக்கும் கொள்கைகளுக்கும் வழிவகுக்கும் என்று தாம் நம்புவதாகவும் ஏப்ரல் 16ஆம் தேதி தமது இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்தார்.

“சிங்கப்பூரர்கள் பலர் தங்கள் கவலைகள் குறித்து கேட்கப்படுவதில்லை என்று நினைக்கிறார்கள். மேலும், கட்சி வேறுபாடுகள் இன்றி புதிய கண்ணோட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் அதை மாற்ற விரும்புகிறேன்,” என்று திரு லோ கூறினார்.

ராடின் மாஸ் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக திரு மெல்வின் யோங் இருந்தார். 2020 பொதுத் தேர்தலில் திரு யோங், சீர்திருத்தக் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றார்.

குறிப்புச் சொற்கள்