‘வாகன உரிமைச் சான்றிதழ் முறையில் தீவிர மறுஆய்வு தேவை’

1 mins read
363965ab-5c4f-40c2-88d9-b34eca47ded3
நவம்பர் மாதம் நடைபெற்ற ஆக அண்மைய ஏலக்குத்தகையில் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் குறைந்ததைத் தொடர்ந்து, கார் விலைகள் இறங்கியுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நவம்பர் 8ஆம் தேதி வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்களில் ஏற்பட்ட சரிவு, அடுத்த ஆண்டில் கட்டணங்கள் கீழ்நோக்கிச் செல்லும் போக்கின் தொடக்கமாக இருக்கலாம் என்று கார் விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

நவம்பர் மாதத்தின் இறுதி ஏலக்குத்தகையில் கட்டணங்கள் அதிகரித்தாலும் அதே நிலை தொடரக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், சந்தை நிலவரத்தை மேம்பட்ட முறையில் பிரதிபலிக்கவும், கட்டணங்களில் அதிக அளவிலான வித்தியாசத்தைத் தவிர்க்கவும் சிஓஇ முறை தீவிரமாக மறுஆய்வு செய்யப்படவேண்டும் என்று விற்பனையாளர்களும் நிபுணர்களும் நம்புகின்றனர்.

நவம்பர் மாதத்திற்கும் ஜனவரி மாதத்திற்கும் இடையே, அதிகரித்துள்ள சிஓஇ ஒதுக்கீடு (9,313) காரணமாக அடுத்த ஆண்டு கட்டணங்கள் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என்று கார் விற்பனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கு முந்தைய காலாண்டில் அந்த எண்ணிக்கை 6,901ஆக இருந்தது. ஆகஸ்ட்-அக்டோபர் காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் அது 35 விழுக்காடு அதிகம்.

நவம்பர் 8ஆம் தேதி முடிவடைந்த ஏலக்குத்தகையில், சிஓஇ கட்டணங்கள் அனைத்துப் பிரிவுகளிலும் குறைந்தன.

பெரிய கார்கள், மின்சாரக் கார்கள் இடம்பெறும் ‘பி’ பிரிவுக்கான சிஓஇ கட்டணம் $40,000 குறைந்து $110,001ஆக உள்ளது.

பொதுப் பிரிவுக்கான சிஓஇ கட்டணம் கிட்டத்தட்ட $33,000 இறங்கி, $125,011 எனப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்