மன்னிப்புக் கேட்ட டிபிஎஸ்

டிபிஎஸ், மின்னிலக்கச்  சேவையில் ஏற்பட்ட இடையூறு களுக்காக தனது பங்குதாரர் களிடமும் வாடிக்கையாளர்களிடமும் நேற்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது.

சேவையில் ஏற்பட்ட தடங் கலைப் பற்றி விசாரிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று ஆண்டு பொதுக் கூட்டத்தில் சிங்கப்பூரின் டிபிஎஸ் அறிவித்தது.

புதன்கிழமை அன்று மின்னிலக்க வங்கிச் சேவைகள் செயல் படாததால் பல வாடிக்கையாளர்கள் திண்டாடினர். 

பதினாறு மாதங்களில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட இந்த சேவைத் தடையால் மிகவும் சங்கடப்படுகிறோம் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரியான பியூஷ் குப்தா தெரிவித்தார். 

“24 மணி நேரமும் தடையற்ற மின்னிலக்கச் சேவையை உறுதி செய்வதே எங்களுடைய முக்கிய முன்னுரிமை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதில் பின்தங்கிவிட்டோம். இதுவொரு வருத்தமான சம்பவம்,” என்று பங்குதாரர்களின் கூட்டத்தில் பியூஷ் குப்தா தெரிவித்தார். 

அப்போது தனது ஆழ்ந்த  வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையில் டிபிஎஸ் வங்கியின் தலைவரான பீட்டர் சியா, பங்குதாரர்கள் முன்னிலையில் தலை வணங்கினார்.

டிபிஎஸ் வங்கி அதன் மின்னிலக்கச் சேவை, தொழில்நுட்ப வசதிகளுக்குப் பெயர்போனது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலை அதன்  மின்னிலக்கச் சேவை, வங்கியின் கைபேசிச் செயலி உள்ளிட்ட வற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியவில்லை.  

அது மட்டுமல்லாமல் ‘பேலா’ செயலியும் முதலீட்டு இணையத் தளமும் செயலிழந்து கிடந்தது.

இந்த இடையூறு மாலை 5.30 மணி வரை நீடித்தது.

“2021ஆம் ஆண்டு சம்பவத்துக்குப் பிறகு சுயேச்சை நிபுணர்களுடன் இணைந்து செயல் பட்டு சேவைகளை மீட்கும் முறைகளை வலுப்படுத்தினோம். 

“பொறியியல் குழுவை மேம்படுத்தினோம். 3வது தரப்பு சேவை களை நன்கு புரிந்துகொண்டு செயல்பட்டோம். துரதிர்ஷ்டவசமாக இது போதாது,” என்று திரு  பியூஷ் குப்தா குறிப்பிட்டார்

புதன்கிழமை சேவைத் தடை யால் 40 முதல் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!