டிபிஎஸ் வங்கி மேலாளருக்கு 6½ ஆண்டுகள் சிறை; எழுவரிடம் $1.4 மில்லியன் பறிப்பு

டிபிஎஸ் வங்கி மேலாளருக்கு 6½ ஆண்டுகள் சிறை; எழுவரிடம் $1.4 மில்லியன் பறிப்பு

1 mins read
c50b7cef-11da-4d7e-9c90-69b15f583864
பாதிக்கப்பட்டோரில் ஐவர் தொடர்புடைய ஆறு மோசடி குற்றச்சாட்டுகளையும் சுங் ஏற்றுக்கொண்டார்.  - படம்: பிக்சாபே

டிபிஎஸ் வங்கியின் முன்னாள் மேலாளரான 32 வயது பெஞ்சமின் சுங் ஹியாங் வீ, தனது உறவினர் உட்பட எழுவரை ஏமாற்றி $1.4 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்பட்டது.

அக்குற்றத்திற்காக அவருக்குத் திங்கட்கிழமையன்று (மே 25) 6½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

செல்வவளத் திட்ட மேலாளராகப் பணியாற்றியபோது, வங்கியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, போலியான இரண்டாண்டு நிலையான வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு வாடிக்கையாளர்களை அவர் ஏமாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் 2024ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு இடையிலான காலத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகச் சொல்லப்பட்டது.

$66,550க்கும் $441,850க்கும் இடைப்பட்ட பணத்தைப் பாதிக்கப்பட்டோர் சுங்கிடம் இழந்தனர்.

அவர்களில் சுங்கின் 62 வயது உறவினரும் ஒருவர். அவரிடமிருந்து மட்டும் $441,850 பறிக்கப்பட்டது.

தவறான வழியில் சம்பாதித்த பெரும்பாலான பணத்தை இணையச் சூதாட்டம், திருமணம், வீட்டு மறுசீரமைப்புப் பணிகள் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்டோரில் ஐவர் தொடர்புடைய ஆறு மோசடிக் குற்றச்சாட்டுகளையும் சுங் ஏற்றுக்கொண்டார்.

அவர், இதுவரை பாதிக்கப்பட்டவர்களிடம் $231,000க்கும் அதிகமான தொகையைத் திருப்பித் தந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்