டிபிஎஸ் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தா நவம்பர் 7, 8ஆம் தேதிகளில் தமது டிபிஎஸ் பங்குகளின் பெரும்பகுதியை விற்றார். டிபிஎஸ் பங்கு விலை $40ஐ தாண்டிவிட்ட நிலையில், அவர் தம் பங்குகளை விற்க முடிவெடுத்தார்.
அந்த இரு நாள்களில் திரு குப்தா 300,000 பங்குகளை விற்றதாக டிபிஎஸ் வங்கி திங்கட்கிழமை (நவம்பர் 11) தெரிவித்தது. நவம்பர் 7ஆம் தேதி ஒரு பங்கிற்கு $41.7513 என்ற விலையில் 100,000 பங்குகளையும் அதற்கு அடுத்த நாள் $42.2023 என்ற விலையில் 200,000 பங்குகளையும் திரு குப்தா விற்றார்.
இந்த இரு பரிவர்த்தனைகளும் அவருக்கு $12.6 மில்லியனைப் பெற்றுத் தந்தன. இதன்மூலம் திரு குப்தா வைத்திருந்த பங்குகளின் எண்ணிக்கை 2.2 மில்லியனிலிருந்து 1.9 மில்லியனாகக் குறைந்தது.