தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2025 மார்ச்சில் டிபிஎஸ் குழுமத் தலைமைத்துவ மாற்றம்

1 mins read
a3669532-f2b4-48b9-b3e2-d85d76fb20cb
டிபிஎஸ் வங்கித் தலைமை நிர்வாக அதிகாரி பியுஷ் குப்தா (இடம்) 2025ன் ஆண்டுப் பொதுக் கூட்டத்தின்போது ஓய்வு பெறுவார். திருவாட்டி டான் சு ஷான் அப்பதவியை ஏற்பார். - படங்கள்: சோங் ஜுன் லியாங், புளூம்பெர்க்

டிபிஎஸ் வங்கித் தலைமை நிர்வாக அதிகாரி பியுஷ் குப்தா, 64, அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் ஓய்வு பெறவிருக்கிறார்.

15 ஆண்டுகள் அவர் டிபிஎஸ் வங்கியின் தலைமைத்துவப் பொறுப்பில் பணியாற்றியுள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி வங்கியின் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெறும். அப்போது திரு குப்தா ஓய்வு பெற்ற பிறகு அனுபவமிக்க வங்கியாளர் டான் சு ஷான் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.

வங்கியின் இயக்குநர் வாரியம் திருவாட்டி டானைத் தற்போது துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.

56 வயதாகும் திருவாட்டி டான், 35 ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர். சிங்கப்பூர் மட்டுமன்றி ஹாங்காங், தோக்கியோ, லண்டன் போன்ற நகரங்களில் உள்ள முக்கிய நிதி நிலையங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

2010ஆம் ஆண்டு டிபிஎஸ் வங்கியில் சேர்ந்த அவர், வங்கியின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றினார்.

அவர் பணியாற்றிய பிரிவுகளின் மின்னிலக்க மயமாக்கல் உத்திகள் தொடர்பான நடவடிக்கைகளுக்குத் தலைமையேற்று வழிநடத்தினார்.

குறிப்புச் சொற்கள்