தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துபாயில் விரிவாக்கம் செய்வது பற்றி டிபிஎஸ் வங்கி பரிசீலனை

1 mins read
9dd723ee-0069-4432-9157-c1eef7606052
மத்திய கிழக்கில் டிபிஎஸ் வங்கியின் தாக்கம் குறிப்பிட்ட அளவிலேயே இருப்பதாகச் சொன்ன தலைமை நிர்வாகி பியூஷ் குப்தா, அங்கு விரிவாக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். படம்: பிஸ்னஸ் டைம்ஸ் -

துபாயில் விரிவாக்கம் செய்வது பற்றி டிபிஎஸ் குழுமம் பரிசீலித்து வருவதாக அதன் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு வர்த்தக நடுவமான துபாயில் விரிவாக்கம் செய்வது குறித்து ஆராய்ந்துவரும் வங்கிகளில் இப்போது டிபிஎஸ் வங்கியும் சேர்ந்துள்ளது.

துபாய் நிதித் தொழில்நுட்ப உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட திரு குப்தா, செய்திப் படைப்பாளர் யூசோஃப் கமால் எல் டின்னுக்கு செவ்வாய்க்கிழமை (மே 9) பேட்டியளித்தார்.

"துபாயிலும் இந்த வட்டாரத்திலும் கால்பதிக்க உண்மையிலேயே வாய்ப்பு இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்," என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் டிபிஎஸ் வங்கியின் தாக்கம் குறிப்பிட்ட அளவிலேயே இருப்பதாகச் சொன்ன அவர், அங்கு விரிவாக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.

திரு குப்தாவின் கருத்துகள், துபாயின் வளர்ச்சியையும் முக்கியத்துவத்தையும் குறிக்கின்றன. 'ஹெட்ஜ் ஃபண்ட்ஸ்', நிதி நிறுவனங்கள் பலவும் துபாயில் தளம் அமைக்க விரும்புகின்றன.

துபாயில் எளிதாக வர்த்தகம் புரிய முடிவது, வரியற்ற நிலை, அனைத்துலகப் பயணங்களுக்கான நடுவம் போன்ற அம்சங்களால் நிதி நிறுவனங்கள் துபாய்க்கு ஈர்க்கப்படுகின்றன.

இதற்கிடையே, தனியார் பங்கு நிறுவனங்கள் பலவும் துபாயில் விரிவாக்கம் செய்து வருகின்றன.