தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெட்ஸ் அமைப்பின் புதிய தலைவராக ஜெரமி சூ

1 mins read
8277f862-5d41-48c3-b095-c1439699648f
திரு ஜெரமி சூ, பயனீட்டாளர் வங்கி மற்றும் நிதித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். - படம்: டிபிஎஸ்

மின்னணு பரிமாற்றங்களுக்கான கட்டமைப்பு (Network for Electronic Transfers - Nets) எனும் கட்டணச் சேவைகள் குழுமமான நெட்ஸ் அமைப்பின் புதிய தலைவராக, டிபிஎஸ் வங்கியின் பயனீட்டாளர் வங்கிப் பிரிவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு ஜெரமி சூ செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 செப்டம்பர் முதல் நெட்ஸ் அமைப்பின் தலைவராக இருந்துவரும் யுஓபி வங்கியின் சூசன் ஹுவியிடமிருந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

திருவாட்டி ஹுவி, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் யுஓபி வங்கிக் குழுமத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று அவ்வங்கி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

டிபிஎஸ், யுஓபி , ஓசிபிசி வங்கிகளுக்குச் சொந்தமான நெட்ஸ் அமைப்பின் தலைவர் பதவியை, மூன்று பங்குதாரர் வங்கிகளிலிருந்து ஒருவர், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்றுக்கொள்வார்.

திரு ஜெரமி சூ, பயனீட்டாளர் வங்கி மற்றும் நிதித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். அவர் டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கிகளின் செல்வ மேலாண்மைக் கட்டமைப்பையும் ஏடிஎம், மின்னிலக்க, கைப்பேசிச் சேவைகளையும் மேற்பார்வையிடுகிறார்.

குறிப்புச் சொற்கள்