தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$3.03 பில்லியன் காலாண்டு லாபம் ஈட்டிய டிபிஎஸ் குழுமம்

2 mins read
e4f3ddfc-4289-4f5e-b4a5-9a886af0b488
டிபிஎஸ் குழுமத்தின் பங்குகள் $2.54 அல்லது 6.5 விழுக்காடு உயர்ந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள பங்குகளைத் திரும்பவும் வாங்கும் திட்டத்தை டிபிஎஸ் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.

செல்வ நிர்வாகக் கட்டணமும் வர்த்தக வருமானமும் காலாண்டு டிபிஎஸ் குழுமத்தின் லாபம் முதல்முறையாக $3 பில்லியனுக்கும் மேல் உயர காரணமாக இருந்தன.

பங்குகளைத் திரும்ப வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, முன்னுரைக்கப்பட்டதைவிட அதிக லாபம் ஈட்டப்பட்டதை அடுத்து, டிபிஎஸ் குழுமத்தின் பங்குகள் உயர்ந்தன.

டிபிஎஸ் குழுமத்தின் பங்குகள் $2.54 அல்லது 6.5 விழுக்காடு உயர்ந்தன

நண்பகல் நேரப் பங்குச்சந்தை இடைவேளையின்போது டிபிஎஸ் குழுமத்தின் பங்கு விலை $41.69ஆகப் பதிவானது.

டிபிஎஸ் குழுமத்தின் பங்கு இவ்வாண்டு 36 விழுக்காட்டுக்கும் அதிகம் ஏற்றம் கண்டுள்ளது.

இவ்வாண்டின் முதல் காலாண்டு லாபத்தை வெளியிட்ட முதல் உள்ளூர் வங்கியான டிபிஎஸ், தனது லாபம் 15 விழுக்காடு அதிகரித்ததாகக் கூறியது.

$3.03 பில்லியன் காலாண்டு லாபம் ஈட்டியதாக அது தெரிவித்தது.

டிபிஎஸ் குழுமம் ஏறத்தாழ $2.8 பில்லியன் லாபம் ஈட்டும் என்று ஐந்து பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்திருந்ததாக எல்எஸ்இஜி தரவுகள் காட்டின.

உலகளாவிய வட்டி விகித அதிகரிப்பால் உள்ளூர் வங்கிகள் பலனடைந்துள்ளன.

அதுமட்டுமல்லாது, அண்மை காலமாக சிங்கப்பூர் அரசியல் சூழலில் நிலவும் நிலைத்தன்மையும் உள்ளூர் வங்கிகளுக்கு லாபத்தை ஈட்டுத் தந்துள்ளது.

இதற்கிடையே, 2025ஆம் ஆண்டில் தனது லாபம் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கும் என்று டிபிஎஸ் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து சிங்கப்பூர் அறிமுகப்படுத்த இருக்கும் 15 விழுக்காடு உலகளாவிய குறைந்தபட்ச வர்த்தக வரி இதற்குக் காரணம் என்று அது கூறியது.

இந்த வரியை டிபிஎஸ் உட்பட பன்னாட்டு நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

குறிப்புச் சொற்கள்