டிபிஎஸ் வங்கியின் இணையச் சேவையில் தடங்கல்

1 mins read
af3c5b17-d2e6-4a7f-85ff-45f44918e9f0
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

டிபிஎஸ் வங்கியின் இணையச் சேவையில், வெள்ளிக்கிழமை (மே 5) கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தடங்கல் ஏற்பட்டது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் இணைய சேவையைப் பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.

சேவைத் தடங்கல் பிற்பகல் 12:30 மணிவாக்கில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

வங்கியின் தானியங்கி சேவையிலும் தடங்கல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பிற்பகல் 1:30 முதல் டிபிஎஸ் சேவைகள் அனைத்தும் வழக்கநிலைக்கு திரும்பியதாக 2:40 மணிக்கு வங்கி சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுபோன்ற தடங்கல்கள் ஏற்படுவதில் இது இரண்டாவது முறை.

இதற்கு முன்னர் மார்ச் 29ஆம் தேதி டிபிஎஸ் வங்கியின் இணையச் சேவையில் காலை 7 மணி முதல் இரவு 7:30 மணி வரை தடங்கல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 12 மணி நேரம் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்