எதிர்காலப் பொருளியல் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் பியுஷ் குப்தா, தில்ஹன் பிள்ளை

எதிர்காலப் பொருளியல் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் பியுஷ் குப்தா, தில்ஹன் பிள்ளை

1 mins read
0fa54484-da4c-4988-9dbf-cc0ab3b741ec
டிபிஎஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பியுஸ் குப்தா. - படம்: புளூம்பர்க்

புதிய எதிர்காலப் பொருளியல் ஆலோசனைக் குழுவில் டிபிஎஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பியுஷ் குப்தாவும் தெமாசெக்கின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான தில்ஹன் பிள்ளையும் அங்கம் வகிக்கின்றனர்.

21 உறுப்பினர்களைக் கொண்ட புதிய குழு அதன் முதல் கூட்டத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று நடத்தியது.

2017ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை இயங்கிய எதிர்காலப் பொருளியல் மன்றத்துக்குப் பதிலாக இந்தப் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மற்றும் உருமாற்றத்துக்குத் தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளை இக்குழு வழங்கும்.

புதிய எதிர்காலப் பொருளியல் ஆலோசனைக் குழுவுக்குத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தலைமை தாங்குகிறார்.

துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங்கும் புதிய ஆலோசனைக் குழுவில் இருக்கிறார்.

பல்வேறு துறைகளில் அனுபவம்வாய்ந்தவர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்