தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டாம் காலாண்டில் டிபிஎஸ் வங்கியின் லாபம் 6% அதிகரித்தது

1 mins read
பங்குகளுக்கு 54 காசு ஈவுத்தொகை அறிவிப்பு
3716408b-963d-4d6e-a93c-4b07fa9eddd2
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டிபிஎஸ் குழுமத்தின் இரண்டாம் காலாண்டு வருவாய் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு நடவடிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து சொத்து நிர்வாகக் கட்டணமும் அதிகரித்தது இதற்குக் காரணம்.

இரண்டாம் காலாண்டில் டிபிஎஸ் வங்கியின் நிகர லாபம் $2.79 பில்லியனாகப் பதிவானது. சென்ற ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்புநோக்க இது 6 விழுக்காடு அதிகம்.

சிட்டி குழுமத்தின் தைவானிய வர்த்தகத்தை இணைத்ததற்கான செலவைத் தவிர்த்து, இரண்டாம் காலாண்டுக்கான டிபிஎஸ் வங்கியின் வருவாய் $2.8 பில்லியன். ஓராண்டுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 4 விழுக்காடு அதிகம் என்று கூறப்பட்டது.

இவ்வேளையில், டிபிஎஸ் குழுமம் அதன் பங்குகளுக்கு இரண்டாம் காலாண்டுகான ஈவுத்தொகையாக 54 காசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இத்துடன் இந்த ஆண்டின் முற்பாதிக்கான ஈவுத்தொகை ஒவ்வொரு பங்குக்கும் $1.08ஆக இருக்கும்.

வங்கியில் பெறப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 3 விழுக்காடு அதிகரித்ததாகவும் வைப்புநிதிகளின் எண்ணிக்கை 6 விழுக்காடு கூடியதாகவும் கூறப்பட்டது. சிட்டி தைவான் ஒருங்கிணைப்பு இதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது.

செலவுகள் 12 விழுக்காடு அதிகரித்து $2.17 பில்லியனாகப் பதிவானது. இதில் 5 விழுக்காட்டுப் புள்ளி, சிட்டி தைவான் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான செலவு.

முதல் காலாண்டுடன் ஒப்புநோக்க, டிபிஎஸ் வங்கியின் நிகர லாபம் 5 விழுக்காடு குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்