மேற்கு ஜாவா நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மேற்கு ஜாவா நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
bd2cb290-959b-40c1-961b-470bf9779589
மேற்கு ஜாவா நிலச்சரிவில் இன்னமும் 15 பேரைக் காணவில்லை. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தில் ஒரு வாரத்துக்குமுன் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை 53க்கு அதிகரித்துள்ளது. 15 பேரை இன்னமும் காணவில்லை என்று இந்தோனீசியாவின் முக்கிய மீட்பு அமைப்பான பசார்னாஸ் தெரிவித்தது.

எல்லைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 23 ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக இந்தோனீசியக் கடற்படை குறிப்பிட்டது.

கனத்த மழை காரணமாக இம்மாதம் 24ஆம் தேதி பண்டுங் பாராட்டில் உள்ள பாசிர் லாங்குவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

அதற்குமுன் கடந்த ஆண்டு டிசம்பரில் சுமத்ரா தீவில் பலத்த புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,200 பேர் மாண்டதுடன் மில்லியன்கணக்கான குடியிருப்பாளர்கள் வீடுகளை இழந்தனர்.

இதற்கிடையே, காணாமற்போனோரைத் தேடும் பணிகளை அவசர மீட்புக் குழுவினர் ஏழு நாள்கள் அதாவது பிப்ரவரி 6ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்