வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள், மோட்டார்சைக்கிள்களைத் தவிர்த்து எஞ்சிய பிரிவுகள் அனைத்திலும் புதன்கிழமை (பிப்ரவரி 5) இறக்கம் கண்டன. சிறிய கார்களுக்கான கட்டணம் ஆக அதிகமாக $8,601 குறைந்தது.
சிறிய, குறைந்த ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான (‘ஏ’ பிரிவு) சிஓஇ 9.2 விழுக்காடு சரிந்து $85,000 ஆனது.
பெரிய, கூடுதல் ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான (‘பி’ பிரிவு) சிஓஇ, 4.7 விழுக்காடு குறைந்து $111,104 ஆனது.
பொதுப் பிரிவுக்கான (‘இ’ பிரிவு) சிஓஇ 4.4 விழுக்காடு குறைந்து $115,112 ஆனது.
வர்த்தகப் பிரிவுக்கான (‘சி’ பிரிவு) சிஓஇ 4.5 விழுக்காடு இறக்கம் கண்டு $62,506 ஆனது.
மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ மட்டும் 7.4 விழுக்காடு அதிகரித்து $8,289ஆகப் பதிவானது.