நான்கு எம்ஆர்டி வழித்தடங்களின் செயல்திறன் மோசமாக இருந்ததன் விளைவாக, சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பு 2025ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட குறைவான நம்பகத்தன்மையைக் கொண்டிருந்தது.
ஐந்து எம்ஆர்டி வழித்தடங்களிig, வட்டப் பாதை மட்டுமே 2024ஐ விட கணிசமான சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. சிங்கப்பூரின் ஆறாவது பாதையான தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை புதியது என்பதால் இந்த அளவீடுகளில் சேர்க்கப்படவில்லை.
2025ஆம் ஆண்டில், எம்ஆர்டி கட்டமைப்பில் உள்ள ரயில்கள் தாமதங்களுக்கு இடையில் 1.606 மில்லியன் ரயில்-கி.மீ. தூரம் பயணம் செய்தன. ஒப்புநோக்க, 2024ல் அது 1.982 மில்லியன் ரயில்-கி.மீ. தூரமாக இருந்தது. இது சிங்கப்பூரின் ரயில் நம்பகத்தன்மை இலக்கை விட அதிகமாக உள்ளது.
சேவைத் தடைக்கு இடையிலான சராசரி கிலோமீட்டர் (kilometres between failure - எம்கேபிஎஃப்) மூலம் இது அளவிடப்படுகிறது. அந்த வகையில் முழு எம்ஆர்டி கட்டமைப்புக்குமான அளவீடு ஒரு மில்லியன் ரயில்-கி.மீ.
ஐந்து நிமிடங்களுக்கு மேல் தாமதத்தைச் சந்திப்பதற்கு முன்பு ஒரு ரயில் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறது என்பதைப் பிரதிபலிக்கும் எம்கேபிஎஃப், ரயில் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் பொறியியல் அளவீடாகும். இது எந்த இடையூறின் தீவிரத்தையும் பிரதிபலிக்காது.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) அன்று அதன் அண்மைய மாதாந்தர ரயில் நம்பகத்தன்மை அறிக்கையில் நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த விவரங்களை வழங்கியது. முதல் முறையாக, எதிர்பார்க்கப்பட்டபடி நவம்பர் வரை மட்டும் அல்லாமல், டிசம்பர் மாதத்திற்கான தற்காலிகத் தரவுகளையும் அது அறிக்கையில் சேர்த்துள்ளது.
ரயில் நம்பகத்தன்மை குறித்த புதுப்பித்த தகவல்களை வழங்குவதற்காக, முந்தைய மாதம் வரையிலான தரவுகளை இந்த அறிக்கைகள் இப்போது உள்ளடக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
ரயில் நம்பகத்தன்மை குறித்த தகவல்கள் வழங்கப்படும் விதத்தில் இது அண்மைய மாற்றமாகும். அக்டோபர் 2025 முதல், ஆணையம் அதன் அறிக்கையின் இடைவெளி காலத்தை அதிகரித்துள்ளது. மேலும் நவம்பர் 2025 முதல், எம்கேபிஎஃப் புள்ளிவிவரங்களைத் தவிர மற்ற நம்பகத்தன்மை தகவல்களும் இதில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் எம்கேபிஎஃப்பின் 12 மாதச் சராசரியை அடிப்படையாகக் கொண்டவை.
இந்த அளவீட்டின்படி, டௌன்டவுன் பாதை 2025ஆம் ஆண்டில் 2.787 மில்லியன் ரயில்-கி.மீ. தூரத்தை எட்டியது. இது 2024ல் 8.131 மில்லியன் ரயில்-கி.மீ. தூர அளவீட்டிலிருந்து குறைந்துள்ளது. அப்படியிருந்தும், எஸ்டிஎஸ் டிரான்சிட்டால் இயக்கப்படும் பாதை மிகவும் நம்பகமானதாக இருந்தது.
இரண்டாவது மிக உயர்ந்த தரவரிசை பெற்ற பாதை, எஸ்எம்ஆர்டியால் இயக்கப்படும் வட்டப் பாதை ஆகும். இது 2025ல் 2.464 மில்லியன் ரயில்-கி.மீ. தூரத்தை எட்டியது. 2024ல் 919,000 ரயில்-கி.மீ. தூரத்திலிருந்து அது உயர்ந்துள்ளது.
2025ஆம் ஆண்டில் ஐந்து எம்ஆர்டி வழித்தடங்களில் ஏழு முறை சேவை தாமதங்கள் ஏற்பட்டன. அவை 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தன. இந்த விகிதம் 2024ஆம் ஆண்டைப் போலவே இருந்தது.

