தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் முழுநேர வேலையில் சேர்ந்த பட்டதாரிகள் எண்ணிக்கை சரிவு: ஆய்வு

2 mins read
கூடுதலானோருக்கு அதிக ஊதியம் கிடைத்தது
8b836452-eb14-409c-ad87-08c11c515ea9
சென்ற ஆண்டு கூடுதலான புதிய பட்டதாரிகள் வேலையற்றோராக இருந்தனர் என்றும் 12.9 விழுக்காட்டினருக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2024) புதிய பட்டதாரிகள் முழுநேர நிரந்தர வேலையில் சேர்வது கடினமாக இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அண்மைய பட்டதாரிகள் வேலைவாய்ப்புக் கருத்தாய்வில் முழுநேர நிரந்தர வேலை கிடைக்காத புதிய பட்டதாரிகளின் விகிதம் 80 விழுக்காட்டுக்குக்கீழ் குறைவாகப் பதிவானது.

பிப்ரவரி 24ஆம் தேதி இந்தக் கருத்தாய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

சென்ற ஆண்டு 79.5 விழுக்காட்டுப் புதிய பட்டதாரிகள் முழுநேர வேலைவாய்ப்பைப் பெற்றனர். ஒப்புநோக்க, 2023ல் அந்த விகிதம் 84.1ஆக இருந்தது.

இருப்பினும், முழுநேர வேலையில் சேர்ந்த புதிய பட்டதாரிகளுக்குச் சென்ற ஆண்டு இடைநிலை மாத வருவாய் $4,500 என்றும் அதற்கு முந்தைய ஆண்டு அது $4,317ஆக இருந்தது என்றும் ஆய்வு கூறியது.

2024ல் புதிய பட்டதாரிகளில் கூடுதலானோர் வேலையின்றி இருந்தனர். 2023ஆம் ஆண்டில் 10.4 விழுக்காடாக இருந்த அத்தகையோர் விகிதம் 2024ல் 12.9 விழுக்காடாக அதிகரித்தது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு), சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி), சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (எஸ்யுஎஸ்எஸ்) ஆகியவற்றில் முழுநேரப் பாடத்திட்டங்களில் பயின்று, பட்டம் பெற்ற ஏறக்குறைய 12.500 பேர் இந்தக் கருத்தாய்வில் பங்கேற்றனர்.

அந்தந்தப் பல்கலைக்கழகம் அந்தப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு குறித்த கருத்தாய்வை நடத்தியது. அவர்கள் இறுதித் தேர்வை எழுதிக் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆன நிலையில் சென்ற ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி புதிய பட்டதாரிகளிடம் கருத்துத் திரட்டப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கல்வி ஆண்டு வேறுபட்டிருப்பதால் சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கல்விக்கழகம் (எஸ்ஐடி) தற்போதுதான் இந்தக் கருத்தாய்வை நடத்திவருவதாகவும் அதன் முடிவுகல் பின்னர் வெளியிடப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கருத்தாய்வில் கலந்துகொண்ட ஏறத்தாழ 11,000 பேர் வேலையில் உள்ளோர் அல்லது முனைப்புடன் வேலை தேடிக்கொண்டிருப்போர். இவர்களில் 87.1 விழுக்காட்டினர் பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் நிரந்தர, தன்னார்வ, பகுதிநேர வேலைகளில் சேர்ந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இந்த விகிதம் 2023ஆம் ஆண்டில் 89.6 விழுக்காடாக இருந்தது.

சுகாதார அறிவியல், வர்த்தகம், தகவல்-மின்னிலக்கத் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைப் பயின்றோர் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் முழுநேர, நிரந்தர வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். சென்ற ஆண்டு இத்தகைய புதிய பட்டதாரிகளின் விகிதம் 88 விழுக்காடாகப் பதிவானது. 2023ல் அது 83 விழுக்காடாக இருந்தது.

தகவல்-மின்னிலக்கத் தொழில்நுட்பக் கல்வி பயின்றோரின் நிகர வருவாய் 2024ஆம் ஆண்டில் $5,600 ஆக உயர்ந்தது. 2023ல் அவர்கள் $5,500 நிகர வருவாய் ஈட்டினர்.

மற்ற பிரிவுகள் அனைத்திலும் முழுநேர, நிரந்தர வேலையில் சேர்ந்த புதிய பட்டதாரிகளின் இடைநிலை மாத வருமானம் அதிகமாகப் பதிவானது

குறிப்புச் சொற்கள்