தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயீசா கானின் சாட்சியம் நம்பகத்தன்மை அற்றது என்பதை நிரூபிக்க முனையும் தற்காப்புத் தரப்பு

1 mins read
1b23172a-34f5-4c51-bf2f-360dae16752f
வழக்கு விசாரணையின் மூன்றாவது நாளில் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்குடன் (இடது) தற்காப்பு வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜுமாபோய். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததன் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் வழக்கு விசாரணை, மூன்றாவது நாளாக புதன்கிழமை (அக்டோபர் 16) நடைபெறுகிறது.

வழக்கின் சாட்சியாக பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ரயீசா கான் காலை 8.50 மணியளவிலும் பிரித்தம் சிங் காலை 9 மணிவாக்கிலும் அரசு நீதிமன்றத்துக்கு வந்தனர்.

நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் திருவாட்டி ரயீசாவின் சாட்சியம் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என மெய்ப்பிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தற்காப்புத் தரப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

திருவாட்டி ரயீசாவை விசாரிக்க பாட்டாளிக் கட்சி 2021 நவம்பரில் அமைக்கப்பட்ட கட்டொழுங்குக் குழு குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் குழு கேள்வி கேட்டிருந்தது.

போதிய நாடாளுமன்றக் கேள்விகளைத் தாம் அனுப்பியதில்லை என்றும் நாடாளுமன்றத்தில் தாம் போதிய அளவில் செயலாற்றவில்லை என்றும் கட்டொழுங்குக் குழு தம்மிடம் கூறியபோது தாம் வியப்படைந்ததாக திருவாட்டி ரயீசா கூறினார்.

கட்டொழுங்குக் குழு முன்வைத்த குறைகூறல்கள் நியாயமற்றவை என்று தாம் கருதுவதாக திருவாட்டி ரயீசா கூறினார்.

திருவாட்டி ரயீசா பொய் சொல்லும் பழக்கம் உள்ளவர் என வாதிட்ட பிரித்தம் சிங்கின் வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜுமாபோய், அவரது சாட்சியத்தை நிராகரிக்க நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

அந்தக் கோரிக்கை புதன்கிழமை நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்