தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடக்கு- தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் தாமதம்

2 mins read
பொறியியல் வாகனத்தில் கோளாறு
0846c58d-b066-4a68-aa0b-6aa92b9a788f
ரயில் பயணிகள் தங்கள் பயண நேரத்தில் 10 நிமிடங்களைக் கூட்டிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொறியியல் வாகனத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) காலை கோளாறு ஏற்பட்டது.

இதனால், வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு பெருவிரைவு ரயில் பாதைகளில் செல்லும் பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு தாமதமாக செல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாமதம் வெள்ளிக்கிழமை மாலையிலும் தொடரும் என மாலை 4.27 மணியளவில் தெரிவிக்கப்பட்டது.

பொறியியல் வாகனத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு வடக்கு-தெற்கு தடத்தில், அங் மோ கியோ-ஜூரோங் ஈஸ்ட் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையைப் பாதித்துள்ளதாக எஸ்எம்ஆர்டி காலை 7.00 மணிக்கு தெரிவித்தது.

இதன் காரணமாக, ரயில் பணிமனைகளிலிருந்து பல ரயில்கள் கிழக்கு-மேற்கு தடத்திலிருந்து வடக்கு-தெற்கு ரயில் தடத்திற்கு மாற்றி விடப்பட்டுள்ளதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

இதன் தொடர்பில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் வெள்ளிக்கிழமை காலை 5.52 மணிக்கு தனது முதல் பதிவில், பயணிகள் தங்கள் பயண நேரத்துடன் கூடுதலாக 20 நிமிடங்களைச் சேர்த்துக்கொள்ளும்படி கூறியது. பின்னர், அதை 10 நிமிடங்கள் என மாற்றி இறுதியில் அதை ஐந்து நிமிடங்களாக காலை 7.27 மணிக்கு குறைத்தது.

அத்துடன் பீஷான், உட்லண்ட்ஸ் நிலையங்களுக்கு இடையே வழக்கமான பேருந்து சேவையும் இணைப்பு பேருந்து சேவையும் இலவசமாக வழங்கப்படும் என்றும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் விளக்கியது.

நிலைமையைச் சமாளிக்க பயணிகள் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடம், வட்ட ரயில் தடம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளவும் பயணிகளை அது ஊக்குவித்தது.

இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த எஸ்எம்ஆர்டி நிறுவனம், வழக்கமான பராமரிப்புப் பணிகளிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பொறியியல் வாகனம் ரயில் தட சந்திப்பு ஒன்றில் காலை 5.15 மணிக்கு பழுதானதாக தெரிவித்தது.

இதனால், வடக்கு-தெற்கு தடத்தில் புறப்பட வேண்டிய ரயில் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டதாக அது கூறியது.

அந்தப் பழுதடைந்த வாகனத்தை மீட்க தனது பொறியாளர்கள் பணியில் இறங்கியுள்ளதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்