தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வர்த்தகத்தை மாற்றியமைத்து வரும் பெட்ரோல் நிலையங்கள்

3 mins read
6b241586-554b-4f78-af5e-f8ee636ffe85
கடந்த 2017ல் தெம்பனிசில் முதல் மெக்டோனல்ட் கடையைத் திறந்த ஷெல், பின்னர் ஹாவ்லக், ஹவ்காங் ஆகிய இடங்களில் உள்ள நிலையங்களில் காரில் சென்றபடியே உணவு வாங்கும் ‘டிரைவ் த்ரூ’ மெக்டோனால்ட் கடைகளைத் திறந்தது. 548, ஹாவ்லக் ரோட்டிலுள்ள ஷெல், ‘டிரைவ் த்ரூ மெக்டோனால்ட்’. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்ரோல் வாகனங்கள் குறைந்து மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருவதால் கடந்த இருபது ஆண்டுகளாக சிங்கப்பூர் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எஞ்சியுள்ள பெட்ரோல் நிலையங்களும் ‘சுஷி’, ‘பபிள்’ தேநீர், விரைவுணவு, ‘காயா டோஸ்ட்’ போன்ற மாறுபட்ட சில்லறை விற்பனைகள், மின்னூட்டி நிலையங்களுடன் மாற்றம் கண்டு வருகிறது.

சிங்கப்பூரில் 184 பெட்ரோல் நிலையங்கள் இருப்பதாக பெட்ரோல் நிலைய நடத்துநர்கள் தெரிவித்துள்ளனர். இது 2003ஆம் ஆண்டில் உச்ச எண்ணிக்கையில் இருந்த 222ஐ விட 17.1 விழுக்காடு குறைவு.

பெட்ரோல் நிலைய இடங்கள் நகர மறுசீரமைப்பு ஆணையத்தால் திட்டமிடப்பட்டவை. தேசிய, உள்ளூர் நிலத் தேவைகளும், மின்னிலக்க வாகனங்கள் போன்ற மாற்றங்களும் பெட்ரோல் நிலையங்களுக்கு நிலத்தை ஒதுக்கும்போது கவனத்தில் கொள்ளப்படுவதாக ஆணையம் கூறியது.

அண்மை ஆண்டுகளில் சிங்கப்பூர் நிலையங்களின் எண்ணிக்கை ‘பெரும்பாலும் நிலையாக உள்ளது’ என்று அது சுட்டியது.

எரிபொருளைச் சேமிக்கும் வாகனத் தொழில்நுட்பமும், மின்சார வாகனங்களும் பெட்ரோலுக்கான தேவையைக் குறைந்துவிட்டதன் அறிகுறிகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2023ல் ஒரு காரின் சராசரி வருடாந்தர ஓட்ட தூரம் 16,300 கிலோ மீட்டர் ஆக இருந்தது. இது 2003ஆம் ஆண்டில் 20,200 கிலோ மீட்டரிலிருந்து 19.3 விழுக்காடு குறைந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையக் தரவு காட்டுகிறது. குறைந்த தூரம் பயணம் என்பது, குறைந்த பெட்ரோல் பயன்பாட்டைக் குறிக்கிறது.

2023ன் இறுதி நிலவரப்படி, 79,256 பெட்ரோல் - மின்சார கார்களும் 11,941 முழுமையான மின்சார கார்களும் உள்ளன. இது 2023ன் மொத்த கார் எண்ணிக்கையில் 14 விழுக்காடாகும். 2013ஆம் ஆண்டின் மொத்த கார் எண்ணிக்கையுடன் ஒப்பிட 0.8 விழுக்காடுதான் அதிகம்.

மின்சார கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

2024ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மின்சார கார்களின் எண்ணிக்கை 60 விழுக்காடு அதிகரித்து, 19,098 ஆக உயர்ந்துள்ளது. அக்காலகட்டத்தில், புதிய கார் பதிவுகளில் 32.1% மின்சார கார்களாக இருந்தன.

மின்னூட்ட நேரம் குறைந்து, மின்சார கார்களின் வகைகளும் அதிகரிக்கும்போது இக்கார்களின் விகிதம் அதிகரிக்கும் என்று வாகன தொழில்துறை ஆலோசகர் சே குவீ நெங் கூறினார்.

“சந்தேகத்திற்கு இடமின்றி, பெட்ரோலுக்கான தேவை குறையும். இந்த அளவு மின்சார கார் பயன்பாட்டு விகிதத்தைப் பொறுத்தது. ஆனால் அதே அளவு பெட்ரோல் நிலையங்கள் தேவைப்படுமா? எதிர்காலத்தில் குறைந்த, சிறிய பெட்ரோல் நிலையங்களுக்கான அறிகுறிகளே தென்படுகின்றன,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் பெட்ரோல் நிலையங்களின் சரிவு மற்ற இடங்களில் நடப்பதையும் சுட்டுகிறது.

வரும் 2050ஆம் ஆண்டில் ஐரோப்பாவிலுள்ள பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை 43% குறையும் என்று சியா பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆலோசனை நிறுவனத்தின் 2021ஆம் ஆண்டு அறிக்கை கணித்துள்ளது.

சராசரி வாகன எரிபொருள் பயன்பாட்டின் வீழ்ச்சி, அதிக எரிசக்தி பயன்படுத்தும் இயந்திரக் கார்களின் விகிதம் குறைவது, காரில் பயணம் செய்யும் தூரத்தை தொடர்ந்து குறைப்பது போன்ற பல காரணங்களால் இது சாத்தியமாகும்.

இந்நிலையில், பெட்ரோல் நிலையங்கள் கடையில் விற்பனையை விரிவுபடுத்தி, கார்களுக்கு மின்னூட்டம் செய்யக் காத்திருக்கும் ஓட்டுநர்கள் அல்லது அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களை ஈர்க்க தங்கள் வர்த்தகத்தை மாற்றியமைத்து வருகின்றன.

ஷெல் நிறுவனம், 7-11 கடைத்தொகுதியுடனான தனது 11 ஆண்டு பங்காளித்துவத்தை 2017ல் முடித்த பின்னர், உணவு பான நிறுவனங்களான யா குன் காயா டோஸ்ட், ஓல்ட் சாங்கி, பபிள் தேநீர், மெக்டோனல்ட்ஸ் போன்றவற்றைத் தன் நிலையங்களுக்குக் கொண்டு வந்தது.

எஸ்ஸோ நிலையங்களில், ஃபேர்பிரைஸ் சிறு அங்காடிக் கடைகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்