நினைவிழப்பு நோய்: பழைய நினைவுகளை தட்டியெழுப்பும் ‘என்டியுசி ஹெல்த்’ திட்டம்

நினைவிழப்பு நோய்: பழைய நினைவுகளை தட்டியெழுப்பும் ‘என்டியுசி ஹெல்த்’ திட்டம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Oct 2026 - 9:13 pm

2 mins read

வைனல் இசைத்தட்டுகள், முந்தைய காலத்து நினைவுகளை தட்டியெழுப்பக்கூடிய பழக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி, இலேசான, மிதமான நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட முதியோர் தங்களது பழைய நினைவுகளை மீட்டெடுக்க ‘என்டியுசி ஹெல்த்’ அமைப்பு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மரபுடைமை சார்ந்த நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஈடுபாட்டுத் திட்டம், 1950கள் முதல் 1980கள் வரையிலான வைனல் இசைத்தட்டுகள், பழைய திரைப்பட நுழைவுச்சீட்டுகள், படத் தொகுப்புகள், கருப்பொருளுடனான மின்னிலக்கப் படங்கள், தலைப்புகள் மற்றும் ஒலிப்பதிவுகள் அடங்கிய செயலி ஒன்றையும் பயன்படுத்துகிறது.

இது முதியோருக்கு இடையே உரையாடல்களைத் தொடங்கவும் சக முதியோருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் துணையாக அமைகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2027ஆம் ஆண்டுக்குள் ஐந்து பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.

தேசிய மரபுடைமைக் கழகத்துடன் இணைந்து என்டியுசி ஹெல்த் உருவாக்கியுள்ள இந்த எட்டு வாரக் கட்டமைப்புத் திட்டத்துக்கு, கூ டெக் புவாட் மருத்துவமனை மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

அத்துடன் முதியோர் மருத்துவக் கல்வி, ஆய்வுக் கழகம் இதன் ஆராய்ச்சி மதிப்பீட்டை முன்னெடுத்து வருகிறது. கூ டெக் புவாட் மருத்துவமனையின் ஆலோசனையுடன் இக்கழகம் முன்னோட்ட ஆய்வை நடத்தியது. இத்திட்டத்தில் பங்கேற்ற முதியோரில் 72 விழுக்காட்டினர் நிலையான நேர்மறை மனநிலையையும் அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசும் திறனையும் பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னோட்டத் திட்டத்தில் 25 பேர் பங்கேற்றனர். இத்திட்டம் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்டது.

எட்டு வாரங்களுக்கு நடத்தப்பட்ட இத்திட்டத்தில் வாரத்துக்கு ஒரு முறை 45 நிமிடப் பயிற்சியில் பங்கேற்பாளர்கள் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்