டெங்கிச் சம்பவங்கள் குறைவாக இருந்தாலும் கூடுகின்றன

டெங்கிச் சம்பவங்கள் குறைவாக இருந்தாலும் கூடுகின்றன

1 mins read
abecca1e-a89c-41de-af25-2405ce6dbf6d
இவ்வாண்டு முற்பாதியில் டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் டெங்கிச் சம்பவங்கள் குறைவாக இருக்கின்றன; அதேவேளை, எண்ணிக்கை அதிகரித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூரில் ஆக அதிக டெங்கிச் சம்பவங்கள் பதிவாகும். சிங்கப்பூரில் பரவலாகக் காணப்படும் டெங்கி கிருமி வகையில் காணப்படும் மாற்றத்தால் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்கின்றனர் வல்லுநர்லகள்.

தேசிய சுற்றுப்புற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி இவ்வாண்டு முற்பாதியில் 1,180 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. அதே காலகட்டத்தில் சென்ற ஆண்டு பதிவான 2,583 சம்பவங்களைக் காட்டிலும் எண்ணிக்கை குறைவாகும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்டெங்கிதேசிய சுற்றுப்புற வாரியம்சுகாதாரம்