தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹவ்காங்கில் மீண்டும் போட்டியிடும் டெனிஸ் டான்

1 mins read
bb333188-8295-4db2-847b-b43cbbfb17f0
திரு டெனிஸ் டான். - படம்: பாட்டாளிக் கட்சி

பாட்டாளிக் கட்சியின் டெனிஸ் டான் ஹவ்காங் தனித்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஹவ்காங் தொகுதியில் வெற்றிபெற்ற 54 வயது டான் தற்போது மக்கள் செயல் கட்சியின் மார்‌‌ஷல் லிம்முடன் மோதுகிறார்.

இரண்டு வேட்பாளர்களும் புதன்கிழமை (ஏப்ரல் 23) தெம்பனிசில் உள்ள பொய் சிங் பள்ளியில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திரு டான் 61.21 விழுக்காடு வாக்குகள் பெற்று மசெகவின் லீ ஹோங் சுவாங்கைத் தோற்கடித்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்தபிறகு பொதுமக்கள் முன்னிலையில் பேசிய டானை அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

“பாட்டாளிக் கட்சி ஹவ்காங் குடியிருப்பாளர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றவும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கவும் ஆதரவு கொடுங்கள்,” என்று திரு டான் கேட்டுக்கொண்டார்.

குற்றவியல் வழக்கறிஞரான திரு மார்‌‌ஷல் லிம் பொதுத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடுகிறார்.

ஹவ்காங் மக்களின் குரலாகத் தாம் நாடாளுமன்றத்தில் இருக்கத் தமக்கு வாக்களிக்குமாறு 38 வயது லிம் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

29,433 வாக்காளர்களைக் கொண்ட ஹவ்காங் தனித்தொகுதியைப் பாட்டாளிக் கட்சி 1991ஆம் ஆண்டு முதல் தன்கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்