தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெஸ்மண்ட் லீ: மசெக மத்தியச் செயற்குழுத் தலைவராகப் பொறுப்பு

2 mins read
https://www.straitstimes.com/singapore/politics/desmond-lee-replaces-heng-swee-keat-as-pap-chairman
12e84082-387c-438c-a314-5a52e27623a5
கல்வியமைச்சர் டெஸ்மண்ட் லீ (இடது) அரசியலிலிருந்து ஓய்வுபெறும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட்டுக்குப் (வலது) பதிலாக மக்கள் செயல் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கல்வியமைச்சர் டெஸ்மண்ட் லீ ஆளும் மக்கள் செயல் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் சுவி கியெட்டின் இடத்தை திரு லீ நிரப்புகிறார்.

மக்கள் செயல் கட்சி அதன் மத்திய செயற்குழுவில் இடம்பெற்ற இதர மாற்றங்களையும் வியாழக்கிழமை (மே 29) அறிவித்தது.

இதற்குமுன் துணைப் பொருளாளராக இருந்த சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் துணைப் பொருளாளர் பொறுப்பை ஏற்கிறார்.

மசெக-வின் ஒருங்கிணைப்புச் செயலாளர்களாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவும், சட்ட அமைச்சர் எட்வின் டோங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய வளர்ச்சி அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கான துணையமைச்சர் எல்வின் டான், மசெக இளையர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌‌ஷல் இப்ராஹிம் கட்சியின் மத்திய செயற்குழுவில் புதிய உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவர் மக்கள் செயல் கட்சியின் மலாய் விவகாரப் பிரிவுக்குத் தலைமையேற்பார்.

மத்திய செயற்குழுவின் இதர உறுப்பினர்களாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங், அமைச்சர்கள் கா. சண்முகம், இந்திராணி ராஜா, டான் சீ லெங், விவியன் பாலகிருஷ்ணன், மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், துணை அமைச்சர் டெஸ்மண்ட் சூ, ஜாலான் காயு தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இங் சீ மெங், செங்காங் குழுத் தொகுதியில் போட்டியிட்ட லாம் பின் மின் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், மசெக மகளிர் அணித் தலைவராகவும் பொறுப்பேற்கிறார்.

மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, மசெக-வின் மனநலச் சுகாதாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய நியமனங்கள் மே 29ஆம் தேதி முதல் நடப்புக்கு வருவதாக மக்கள் செயல் கட்சி அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

கட்சிக்கும் சிங்கப்பூருக்கும் ஆற்றிய சேவைக்காகவும் கடந்த ஆண்டுகளில் வகித்த தலைமைத்துவப் பொறுப்புகளுக்காகவும் மக்கள் செயல் கட்சி மத்தியச் செயற்குழு திரு ஹெங்கிற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்